ஆயிரம்.. ரெண்டாயிரம் இல்ல! வீட்டுக்கொரு டூவிலர் தரும் விஜய்! தவெக தேர்தல் வாக்குறுதிகள் இது தானா?
காஞ்சிபுரம்: கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து இன்று காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தி முடித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். காஞ்சிபுரத்தில் அவரது பேச்சு திமுகவை நேரடியாக எதிர்த்திருந்தாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் என சில விஷயங்களை தனது பேச்சினிடையே விஜய் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் வீட்டுக்கு ஒரு டூ வீலர் வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பை மேற்கொண்டு வந்த நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் மிகப்பெரிய துயர சம்பவம் நேரிட்டது. விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இதன்பின்னர் கிட்டத்தட்ட 55 நாட்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் பொதுக்குழுவில் மக்கள் சந்திப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டு இருந்தார். வழக்கமாக பொதுவெளிகளில் பொது மக்களை சந்தித்து வந்த விஜய் இந்த முறை தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டு இருந்தார்.

இதற்காக 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு படை இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பை வழங்கி இருந்தது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளாக சில திட்டங்கள் இடம் பெறும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு பேசியிருந்தார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய்," எல்லோருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காரும் தான் லட்சியம். அதற்கான வசதிக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும்.
அதற்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தார் போல், கல்வியில் பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு பயம் இல்லாமல் மக்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும். பருவ மழை காலங்களில் வெள்ளத்தால் ஊரும் மக்களும் விவசாயமும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மீனவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும். உருவாக்குவதோடு விட்டுவிடாமல் அதை செயல்படுத்த வேண்டும்.
குறிப்பாக தொழில் துறை வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிட ரொம்ப ரொம்ப முக்கியமாக சட்டம் ஒழுங்கை சரியாக வைத்திருக்க வேண்டும். அம்மா, தங்கைகளுக்கு பவர்ஃபுல்லான பாதுகாப்பை உருவாக்க வேண்டும். அண்ணா யூனிவர்சிட்டியில் அந்தப் பெண்ணுக்கு நடந்த பிரச்சனை மாதிரியோ கோவையில் அந்த கல்லூரி பெண்ணுக்கு நடந்த பிரச்சினை மாதிரியோ இனி யாருக்கும் நடக்கவே விடக்கூடாது. நமது வீட்டுப் பெண்கள் பயமே இல்லாமல் இருக்க வேண்டும். இதை எப்படி செயல்படுத்த போகிறோம் என்று நமது தேர்தல் அறிக்கையில் விரிவாக கொடுப்போம்" என பேசினார்.
இதன் மூலம் வீடுதோறும் பெண்களுக்கு டூவிலர், மானிய விலை கார், வீடு விரிவாக்கம், நெசவாளர்கள், மீனவர்களுக்கு நலத்திட்ட உதவி ஆகியவை தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
அரசு மருத்துவமனைகளில் புரட்சி.. இனி மொபைல் ஆப் மூலம் டோக்கன் முன்பதிவு.. விஜய் அரசின் புதிய முடிவு!











Click it and Unblock the Notifications