"ஆண்ட்டி"லவ்.. லாட்ஜில் ரூம் போட்ட ஜோடி.. விடிகாலையில் அலறி வெளியே ஓடிவந்த "பிரபலம்".. யார்னு பாருங்க..!!

52 வயது நபரின் 9 சவரன் நகையை திருடி கொண்டு மாயமான பெண்ணை தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

குமரி: சபலத்தில் விழுந்து ஏமாந்த ஆல்பர்ட், நேராக போலீசுக்கே போய்விட்டார்.. சம்பந்தப்பட்ட "ஹீரோயினை" குமரி போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்..!!

மலிவான சபல புத்தியில், சிக்கி சீரழிந்து, மானம் கப்பலேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது.. இந்த சபலத்துக்கு, வயது வரம்பு ஏதும் இல்லை.. தகுதி தராதரம் அறிவதில்லை.. குடும்பம், குட்டிகளும் கண்ணுக்கு தெரிவதில்லை.

கடந்த மாதம் இப்படித்தான் பூந்தமல்லியில் பைனான்ஸியர் சிக்கினார்.. 50 வயது அந்த நபரின் பெயர் சேகர்.. 22 வயது மாடல் அழகி சுவாதி மீது திடீரென சபலம் வந்துவிட்டது.. சபலம் உச்சக்கட்டத்துக்கு போய்விட்டதால், அந்த பெண்ணுக்கு எதையாவது கிப்ட் தர ஆசைப்பட்டார் தொழிலதிபர் சேகர்..

 நிர்வாண ஸ்வாதி

நிர்வாண ஸ்வாதி

அதற்காக சொந்த வீட்டிலேயே திருடிவிட்டார்.. தன்னுடைய அம்மா, மனைவியின் நகைகளை, அதாவது மொத்தம் 550 பவுன் நகையை ஆட்டைய போட்டுள்ளார்.. சுவாதியின் காலடியில் வைத்தார்.. ஸ்வாதியை நிர்வாணமாக நிற்க வைத்து, அந்த நகைகளை அவருக்கு அணிவித்து அழகு பார்ப்பாராம் சேகர்.. இதை தவிர ரூ.30 லட்சம் பணம் தந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ரூ.10 லட்சத்துக்கு பைக் வாங்கி தந்துள்ளார்.. கடைசியில் பெற்ற தாயே, சேகர் மீது புகார் தந்து, ஸ்வாதியும் கைதாகி, அந்த "கள்ளக்காதல் பரிசுகள்" பெரிதும் பேசப்பட்டன.. இன்னும் அந்த கேஸ் நடந்து கொண்டுதான் இருக்கிறது..

 சபலிஸ்ட்

சபலிஸ்ட்

கடந்த வாரம்கூட, கோவையில் 61 வயது நபர் ஒருவர், இளம்பெண்ணின் சபலத்தில் விழுந்து, ஏகப்பட்ட நகை, பணத்தை இழந்தார்.. இதோ இப்போதும் ஒரு சம்பவம் குமரியில் நடந்துள்ளது.. கன்னியாகுமரியில் பிரபல லாட்ஜில் ஒரு ஜோடி ரூம் எடுத்து தங்கியுள்ளது. இவர்கள் 2 பேரும் காலையில் லாட்ஜில் வந்து ரூம் போட்டுள்ளனர்.. பிறகு, 2 பேரும் அப்போதே வெளியில் எங்கோ சென்றுவிட்டு, அன்று சாயங்காலம்தான் மறுபடியும் ரூமுக்குள் நுழைந்துள்ளனர்.. நைட் சாப்பிட்ட பிறகு, ரூம் விட்டு 2 பேருமே வெளியே வரவில்லை.. மறுநாள் காலை, ரூமில் இருந்து அலறி அடித்து கொண்டு அந்த நபர் வெளியே ஓடிவந்தார்..

 வண்டவாளம் + தண்டவாளம்

வண்டவாளம் + தண்டவாளம்

ரூமில் தன்னுடன் தங்கியிருந்த அந்த பெண்ணை காணோமாம்.. இவர் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் நகையையும் காணோமாம். லாட்ஜ் நிர்வாகத்திடம் இதை சொல்லவும், அவர்கள் நேராக போலீசுக்கு போகும்படி அறிவுறுத்தி உள்ளனர்.. உடனே இந்த நபரும் போலீசுக்கு சென்று, தன்னடைய 9 சவரன் நகையை காணவில்லை என்றும், உடன் தங்கியிருந்த பெண், அந்த நகையை எடுத்து சென்றிருக்கலாம் என்றும் புகார் தந்தார்.. போலீசாரும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.. அப்போதுதான் இவர்களின் வண்டவாளம் வெளியே தெரிந்தது..

 சவுண்டு சத்யா

சவுண்டு சத்யா

சம்பந்தப்பட்ட நபரின் பெயர் ஆல்பர்ட்.. இவர் ஒரு கார் புரோக்கர்.. நெல்லை டவுனை சேர்ந்தவர்.. இன்ஸ்டா ரீல்ஸ் ஹீரோவாக வலம் வருபவர்.. இவரது டிக்டாக் வீடியோக்களுக்கு இன்ஸ்டாவில் ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்கள் உண்டு.. 52 வயதான ஆல்பர்ட்டுக்கும் வந்துவிட்டது சபலம்.. அதே இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர் சத்யா.. "சவுண்டு சத்யா" என்று இவரை செல்லமாக கூப்பிடுவார்களாம்.. மதுரையை சேர்ந்தவர்.. 3 மாதமாக இன்ஸ்டாகிராமில், ஆல்பர்ட்டுடன் பழக்கமாகி உள்ளார். 2 பேரும் சேர்ந்து ஜோடியாக டூயட் பாடி வந்துள்ளனர்.. சத்யாவை நேரில் பார்க்க ஆசைப்பட்டார் ஆல்பர்ட்..

 லாட்ஜ் ரூமில்

லாட்ஜ் ரூமில்

அதன்படி இருவரும் கன்னியாகுமரியில் நேரில் சந்திப்பது என்று முடிவெடுத்தனர்.. அதன்படியே இங்கு வந்து ரூம் போட்டுள்ளனர்.. பகல் முழுக்க ஊரெல்லாம் சுற்றிப்பார்த்துள்ளனர்.. விதவிதமான போஸ்களில், நிறைய செல்பிகளை இவரும் எடுத்துக்கொண்டுள்ளனர்.. சாயங்காலம் ரூமுக்கு திரும்பி வந்துள்ளனர்.. இரவு சாப்பாட்டையும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.. ரூமில் தூங்கும்போது, கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரங்கள் உறுத்தும் என்பதால், அவைகளை கழட்டி வைத்தாராம் ஆல்பர்ட்.. மறுநாள் காலையில் பார்த்தால், நகைகளையும் காணவில்லை.. சவுண்டு சத்யாவையும் காணவில்லை..

 பறந்த பச்சைக்கிளி

பறந்த பச்சைக்கிளி

நகைகளுடன் பச்சை கிளி பறந்துவிட்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.. இதையடுத்து, அன்றைய நாள் முழுவதும் மாறி மாறி எடுத்த செல்பிகளை, போலீசாரிடம் கொடுத்தார் ஆல்பர்ட். அந்த பெண் எங்கே என்று தெரியவில்லை.. நள்ளிரவே ரூமை விட்டு சென்றாரா? அல்லது பொழுது விடிந்ததும் கிளம்பி சென்றாரா? என்பதை அங்குள்ள சிசிடிவி காட்சியில் ஆய்வு செய்து வருகின்றனர்.. அதுவும் இல்லாமல் அந்த பெண்ணின் பெயர் நிஜமாகவே சத்யாவா? சொந்த ஊர் மதுரை என்பது உண்மைதானா என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர்.. "சைலண்ட்டாக" பறந்த சவுண்டு சத்யாவையும் தேடி கொண்டிருக்கிறார்களாம்..!

ஆண்ட்டி சபலம்

ஆண்ட்டி சபலம்

போலீசார் ஆல்பர்ட்டிடம் விசாரணையை மேற்கொண்டபோது, தனக்கு 29 வயதாகிறது என்றும், திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லி, நெருங்கி பழகினாராம் சத்யா.. நள்ளிரவிலேயே ஆல்பர்ட்டுக்கு முழிப்பு வந்துள்ளது.. அப்போதே ரூமில் சத்யாவை காணாமாம்.. உடனே அவருக்கு போன் செய்துள்ளார்.. ஆனால், நம்பரும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சிறிது நேரம் ரூமிலேயே வெயிட் செய்து பார்த்துள்ளார்.. விடியும்வரை சத்யா வரவேயில்லை என்பதால்தான், போலீசுக்கு சென்றதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, சத்யாவின் இன்ஸ்ட்கிராம் பக்கமும் லாக் ஆகி உள்ளதாம்.. அதனால், அவர் தந்த அத்தனை தகவல்களும் பொய்யாக இருக்கும் என்பதால், தீவிரமான தேடுதல் வேட்டையில் குமரி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+