கை கழுவ சென்ற மாணவி..பின்னாலே சென்று கையை ஈரமாக்கி.. மதபோதகர் செய்த ச்சீ ச்சீ செயல்! அதிர்ந்த குமரி
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் ஹோட்டலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் CSI நிர்வாகத்தின் கீழ் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமாக மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்கில துறையினை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு துறை சர்ந்த சிறப்பு வகுப்பு நடைபெற்று உள்ளது.

மத போதகர் சில்மிஷம்
வகுப்புகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் கல்லூரியின் அருகே உள்ள உணவகத்திற்கு சென்று உள்ளனர். அங்கு குமரி மாவட்டம் மேக்காமண்டபத்தை சேர்ந்த ஸ்பெர்ஜன் சாமுவேல் என்ற மதபோதகர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்த மாணவிகளிடம் சில்மிச செய்கையில் அவர் ஈடுப்பட்டதாகவும் மாணவிகளிடம் செல்போன் நம்பரை கேட்டதாகவும் தெரிகிறது.

மாணவி அதிர்ச்சி
மேலும் அதில் ஒரு மாணவி கை கழுவும் இடம் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்று அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மாணவி முன்னிலையில் கைகளை ஈரமாக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஹோட்டலில் இருந்த சக மாணவர்களிடம் தெரிவித்த நிலையில் மாணவர்களுக்கும் மதபோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கார் கண்ணாடி உடைப்பு
இந்நிலையில் மாணவர்களிடம் இருந்து தப்பித்து மதபோதகர் தனது காரில் செல்ல முயன்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். மதபோதகர் சாலையில் வேகமாக காரை இயக்கி செல்லும் வீடியோ மாணவர்களது செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்கான்கடை பகுதியில் மதபோதகரின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது அங்கு கூடியவர்கள் மதபோதகரின் வாகன கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.

போலீசார் விசாரணை
இத்தகவல் அறிந்து வந்த போலீசார் மத போதகரை பாதுகாத்தனர். அவரது காரை பின் தொடரந்து வந்த மாணவர்களை கண்டித்ததோடு மதபோதகரை பத்திரமாக வழியனுப்பியும் வைத்தனர். இந்நிலையில் மதபோதகர் மாணவி புகார் அளித்துள்ளார். புகார் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications