ஏசு கடவுளா? பாதிரியாருடன் ராகுல் பேச்சு.. பாஜக வெறுப்பு தொழிற்சாலையின் கொடூர ட்வீட் - ஜெய்ராம் ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பாஜக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கும் ஆடியோவில் இடம்பெற்றதற்கும் சம்பந்தம் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். இன்று காலை அங்கிருந்து நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி, கேரள மாநிலம் பரசலா பகுதிக்கு செல்கிறார்.

மக்கள் சந்திப்பு பயணம்

மக்கள் சந்திப்பு பயணம்

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.

காஷ்மீர் வரை

காஷ்மீர் வரை

380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.

பாஜக ட்வீட்

பாஜக ட்வீட்

இந்த பயணத்தின்போது கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்து பேசினார். அந்த வீடியோவை வெளியிட்டுள்ள தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பாஜக சப்டைட்டிலுடன் வெளியிட்டு "இது உண்மையான பாரத் ஜோடோ யாத்திரை தான்." என்று குறிப்பிட்டது.

ராகுல் காந்தி கேள்வி

ராகுல் காந்தி கேள்வி

அதில், "ஏசு கிறிஸ்து கடவுளின் அவதாரம் என்பது சரியா" என்று ராகுல் காந்தி கேட்க, ஜார்ஜ் பொன்னையா, "அவர் உண்மையான கடவுள். அவர் தன்னை உண்மையான மனிதனாக காட்டிக்கொண்டது கிடையாது. சக்தி போன்று கிடையாது." என்று அவர் பதிலளித்தார். இந்த 13 வினாடி வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ்

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜக வெறுப்பு தொழிற்சாலையின் கொடூரமான ட்வீட் ஒன்று பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பதிவானதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஒற்றுமை பயணத்தின் வெற்றியை கண்டு நம்பிக்கை இழந்த பாஜகவின் வழக்கமான செயல் இது." என்று விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+