அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் இழுக்க கூடாது.. போராட்டம் நடத்திய பாஜக.. பரபரப்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் யானை வரவில்லை என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி: குமாரகோயில் வைகாசி தேர்திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் இழுக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய பாஜக மாவட்ட தலைவரை போலீசார் கைது செய்தனர்.கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் யானை வரவில்லை என அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோரிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த திருவிழா நாளை 12ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினசரியும் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடந்துவருகிறது. 9ஆம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

யானை
பாரம்பரியமாக யானை கொண்டு வந்து தேரில் போடுகின்ற தடியை எடுத்து ரதவீதிகளில் போடுவது வழக்கம். இந்த ஆண்டு தடியை யானை கொண்டு வரவில்லை. அதுமட்டுமல்லாமல் பத்து நாட்களுக்கு யானை மேல் கும்பம் வைத்து கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வது இயல்பு. இந்த முறை ஒருநாள் கூட யானை வரவில்லை என பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

அமைச்சர்களிடம் வாக்குவாதம்
மீன் வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வரும் வருடங்களில் யானையை வர வைப்பதாக அமைச்சர்கள் மனோ தங்கராஜ் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்ததையடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

தேர் இழுக்க எதிர்ப்பு
இதனையடுத்து குமரகோவில் முருகன் கோவிலில் கடந்த வாரம் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இன்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட விழாவில் மனோ தங்கராஜ் பங்கேற்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு
இன்றைய தினம் தேரோட்டம் காலையில் தொடங்கியது. பாஜக எம்எல்ஏ காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்து அமைப்பினரும் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் மனோ தங்கராஜ் வரவே பாஜகவினரும் இந்து அமைப்பினரும் அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்க கூடாது என்றும் தெரிவித்தனர்.

போராடியவர்கள் கைது
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். குமரகோவில் தேரோட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் விநாயகர் தேரினை வடம் பிடித்து இழுத்தார். தேரோட்டத்தில் அமைச்சர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications