ஆட்சியில் பங்கே காங்கிரஸின் விருப்பம்.. கொளுத்தி போட்ட விஜய் வசந்த்.. ஆடிப்போன அறிவாலயம்
கன்னியாகுமரி: சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது திமுக கூட்டணியிலும் குழப்பங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமைச்சர் ஐ. பெரியசாமி காங்கிரஸ் மீது விமர்சனம் முன் வைத்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள எம்பி விஜய் வசந்த், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தான் அனைத்து தொண்டர்களின் விருப்பம் என வெளிப்படையாக கூறியிருப்பது திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலம் தான் உள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசியல் களம் இப்போதிருந்தே பரபரக்க தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. திமுக தலைமையில் இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி களத்தில் உள்ளன.

திமுக கூட்டணி பஞ்சாயத்து
இரண்டு கூட்டணியிலும் பல்வேறு கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தவெக தலைவர் விஜய் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று கூறிய கருத்து அரசியல் கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. சமீப காலமாக திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் காங்கிரஸ் மகளிரணி நிர்வாகி ஒருவர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுக வில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜோதிமணி எம்பி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் திமுக மற்றும் செந்தில் பாலாஜியை நேரடியாக விமர்சித்தனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி விஜய்யிடம் பேசியிருந்தார்.
அமைச்சர் பெரியசாமி சர்ச்சை
காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் இணைந்து ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கலாம் என்று விருப்பம் தெரிவித்தனர். அந்த சர்ச்சை முடிவதற்குள், தற்போது அடுத்த சர்ச்சை வெடித்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, "பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் மட்டுமே காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள்." என்று கூறியிருந்தார்.
இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சியில் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துள்ளனர். அவர் முன்னிலையிலேயே பெரியசாமி பேசிய இந்தக் கருத்து காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக் சிதம்பரம் எம்பி உள்ளிட்டோர் நேரடியாக பெரியசாமியின் கருத்திற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் பெரியசாமி கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் வைத்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், "அவரின் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் தான் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். ஆட்சியில் பங்கு என்பதுதான் அனைத்து காங்கிரஸ்காரர்களின் விருப்பமாக உள்ளது. நாங்கள் தற்போது இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம்.
எதிர்வருகிற தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும், தேர்தலில் கூடுதல் சீட்களை பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களின் ஆசையாக உள்ளது. அதைத்தான் நாங்கள் அவ்வபோது வெளிப்படுத்திவருகிறோம். எல்லா முடிவுகளையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கும். அவர்களின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்." என்றார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications