கன்னியாகுமரி லாட்ஜில் ஆயுர்வேத மசாஜ்.. உள்ளே சென்றால் பெண்கள் எல்லாம் அப்படி.. அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில், ஒரு விடுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் மற்றும் போலீசார் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் ஆயுர்வேத மசாஜ் பெயரில் விடுதியில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


கன்னியாகுமரியை பொறுத்தவரை மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலா நகரமாகும்.. வங்கக்கடல், அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல் என முக்கடல் சங்கமிக்கும் இடம் என்பதால் ஆன்மீக யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

lodge massage

தினசரி காலை சூரிய உதயத்தை பார்க்கவும், விவேகானந்தர் பாறை, திருவள்ளூவர் சிலை, கண்ணாடி பாலம், ரம்மியமான கடற்கரை, பூங்காக்கள் என ஆன்மீக யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடங்கள் ஏராளமாக உள்ளன. திருவனந்தபுரம், குற்றாலம் வரும் பயணிகள் பலரும் கன்னியாகுமரி வருகிறார்கள். இதன் காரணமாக ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்த நகரமாக கன்னியாகுமரி இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான விடுதிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் மற்றும் போலீசார் விடுதிகளில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது விடுதியோடு சேர்ந்திருந்த ஒரு மசாஜ் சென்டரில் 2 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல் மற்றொரு விடுதியிலும் ஒரு பெண் விபசார தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலாளர் பால்வின் ராபின்சன், மசாஜ் சென்டர் நடத்திய சஜித்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் 3 பேரையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அனுமதியின்றி நடத்தப்படும் அனைத்து மசாஜ் சென்டர்களையும் மூட போலீஸ் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் விபசார புகாரை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி ஆய்வு நடத்தினர். இதையறிந்த சிலர், மசாஜ் சென்டர்களை உடனடியாக மூடிவிட்டு எஸ்கேப் ஆனார்கள். இந்நிலையில் கன்னியாமரி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தினால் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+