குமரியில் சாலையில் தேங்கிய கால்வாய் தண்ணீரில் குளியல் போட்ட முன்னாள் கவுன்சிலர்!..வைரலாகும் வீடியோ
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு அருகே சாலையில் பாய்தோடும் புழுதி படிந்த கால்வாய் தண்ணீரில்
முன்னாள் கவுன்சிலர் ஒருவர் குளித்து போராட்டம் நடத்தி அதை வீடியோாக பதிவு செய்து அதிகாரிகளுக்கு அனுப்பிய வீடியோ சமூக வலைததளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதே போல் முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வார்டு கூட்டமாவு கிராமம் வழியாக திருவிதாங்கோடு கிளை கால்வாய் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கால்வாயின் கடைமடை பகுதிகள் மற்றும் கிளை கால்வாய் பகுதிகளில் முறையாக குடிமராமத்துப் பணிகள் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்ட நிலையில் கால்வாய் தண்ணீர் முறையாக செல்லாமல் முளகுமூடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கூட்டமாவு கிராம சாலையில் மற்றொரு கால்வாய் போல் கழிந்த ஒரு வாரமாக வடிந்தோடி வருகிறது.

கடும் சிரமம்
இதனால் அப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அந்த கால்வாய் அடைப்புகளை சரி செய்து சாலையில் வடியும் தண்ணீரை கட்டுப்படுத்த கோரி பொதுப் பணித் துறை மற்றும் முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலருக்கும் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

பேரூராட்சி 15 ஆவது வார்டு
ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் இன்று மாலை கையில் மக்குடன் அந்த பகுதிக்கு வந்த முளகுமூடு பேரூராட்சி 15-ஆவது வார்டு முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் என்பவர் அதிரடியாக சாலையில் ஓடும் புழுதி கலந்த தண்ணீரில் குளிக்க தொடங்கியதோடு அந்த சாலை தண்ணீரில் உருண்டு புரண்டு நீச்சலடித்தார்.

என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
மேலும் இது போல் சாலையில் ஓடும் தண்ணீரை தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? யார் நடவடிக்கை எடுப்பார்கள்? என்று கேள்வியை முன் வைத்து மீண்டும் குளியலை தொடர்ந்தார். இதை அங்கு இருந்த சில இளைஞர்கள் வீடியோவாகவும் எடுக்க அந்த சாலை வழியாக வந்த வாகன ஓட்டிகள் பலர் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தும் சென்றனர்.

அரசியல் பிரமுகர்கள்
இந்த வீடியோவை முன்னாள் கவுன்சிலர் தங்கப்பன் அதிகாரிகளின் கவனத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. அதே வேளையில் அப்பகுதியில் ஏறாளமான இளைஞர்கள் அரசியல் பிரமுகர்கள் இருந்தும் சாலையில் வடியும் கால்வாய் நீரை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளுக்கோ போராட்டத்திற்கோ முன் வராத நிலையில் முன்னாள் கவுன்சிலர் சாலையில் குளிக்கும் போராட்டம் நடத்தி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே வேளையில் தங்கப்பன் கோரிக்கைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications