நாகர்கோவிலில் ஆச்சர்யம்.. முந்தானையை பிடிச்சு இழுத்து.. அந்த பெண்ணுக்கு கையும் ஓடல, காலும் ஓடல.. வாவ்
நாயின் பாசப்போராட்ட வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது
கன்னியாகுமரி: இணையத்தில் ஒரு வீடியோ ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. அந்த வீடியோவை பார்த்த பலரும் ஆனந்த கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.. பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
எத்தனையோ குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, இதுபோன்ற நாய், பூனை, முயல் போன்ற பிராணிகள் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன.

கரையும் அன்பு
பலமடங்கு புத்துணர்ச்சியை வாரி வழங்குகின்றன.. நம்மிடம் இந்த உயிரினங்கள் காட்டும் பாசமும், அன்பும், விசுவாசமும் எந்தவித நிபந்தனையுமற்றது.. அதேசமயம், இந்த பிராணிகளுக்கும் உணர்வுகள் உண்டு.. கோபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், வெறித்தனம், என அத்தனை உணர்வுகளும் உண்டு.. தன்னை வளர்க்கும் ஓனர்களிடம் உரிமையாக கோபப்பட்டுக் கொள்ளும்.. ஆனா, அடுத்த நிமிடமே, உற்சாகமாகத்தில் ஓடிவந்து நெருங்கி நின்று நேசத்தை கொட்டிச்செல்லும்... இந்த அன்பில் கரைந்து காணாமல் போனவர்கள் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் சிதறுண்டு கிடக்கிறார்கள்.

சேலை முந்தானை
இதற்கு எத்தனையோ சம்பவங்கள் கண்ணெதிரே உதாரணமாகி வருகின்றன என்றாலும், மீண்டும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது... நாகர்கோவில் அடுத்துள்ளது சித்திரை திருமகாராஜபுரம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சுயம்பு செல்வன்.. இவரது மகள் சுகப்ரியா.. 2 நாட்களுக்கு முன்பு சுகப்பிரியாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.. மணமக்களை உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்திவிட்டு சென்றனர்.. பிறகு, திருமணம் நடந்து முடிந்து, கணவருடன், தன்னுடைய மாமியார் வீட்டுக்கு புறப்பட தயாரானார் சுகப்பிரியா..

குரைத்த நாய்
அவரை வழியனுப்ப உறவினர்கள் திரண்டிருந்தனர்.. கிளம்பி வீட்டை விட்டு செல்ல தயாரானபோது, இவர் வளர்த்த செல்ல நாய், அவரிடம் தாவி வந்தது.. நாயை பார்த்ததுமே சுகப்பிரியா அதனை கொஞ்சினார்.. ஆனாலும், சுகப்பிரியாவை நாய் சுற்றி சுற்றி வந்து குரைக்க தொடங்கியது.. அவரை அங்கிருந்து போகவும் விடவில்லை.. இதனால், என்ன செய்வதென்றே புரியாமல் விழித்த சுகப்பிரியா, அதன் தலையை தடவி சமாதானம் செய்துவிட்டு, தன்னுடைய கணவருடன் செல்ல முயன்றார்.. ஆனால், நாய் சுகப்பிரியாவை விடாமல், தன்னுடைய கால்களை தூக்கி அவர் மீது போட்டு, இறுக்கமாக பற்றிக் கொண்டது..

பாசப்போராட்டம்
நாயின் பாசத்தை அங்கிருந்தோரும் ஆச்சரியத்தில் பார்த்தனர்.. சுகப்பிரியாவுக்கு கண்கள் குளமாகிவிட்டன.. ஒருவழியாக நாயை தன்னிடமிருந்து விடுவித்து கொண்டு, மறுபடியும் கணவருடன் செல்ல முயன்றார்.. ஆனால், அந்த நாய், அவருடைய சேலை முந்தானையை பிடித்து இழுத்தது.. இந்த காட்சிகளை பார்த்த எல்லாருமே கலங்கி நின்றார்கள்.. இந்த பாசப்போராட்டம்தான் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. வழக்கமாக, திருமணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு செல்லும் பெண்களை, ஆனந்தக்கண்ணீருடன் பெற்றோர் வழியனுப்பி வைப்பார்கள்.. இங்கே வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது. காலங்கள் பல உருண்டாலும், மாறாமல் புதுப்பொலிவுடன் இந்த உலகை இழுத்து பிடித்து கொண்டிருப்பது இந்த "அன்பு" ஒன்றுதானே...!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications