கன்னியாகுமரி டூ டெல்லி! விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம்! மார்ச் 2ல் துவக்கி வைக்கும் துரை வைகோ!
தமிழ்நாடு விவசாயிகள் நீதி கேட்டு கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை நெடும் பயணம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து டெல்லி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் மேற்கொள்ளும் நீதி கேட்கும் பயணத்தை மார்ச் 2ஆம் தேதி துவக்கி வைக்கிறார் துரை வைகோ.
மார்ச் 2ஆம் தேதி கன்னியாகுமரியில் பயணத்தை தொடங்கும் தமிழக விவசாயிகள் மார்ச் 20ஆம் தேதி டெல்லியை அடையும் வகையில் பயண நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அணி திரண்டு ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். விடுதலை இந்தியாவில் குறிப்பிடத்தக்க போராட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தப் போராட்டத்தை ஒட்டி பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் மீண்டும் போர்க்குரல் உயர்த்தி வருகின்றனர்.

7 கோரிக்கைகள்
இதனிடையே விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றம் வரை 'நீதி கேட்டு நெடும்பயணம்' மேற்கொள்ள இருக்கிறார்கள்.பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 15 விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கொண்ட குழு பி.ஆர்.பாண்டியன் தலைமையில், வரும் மார்ச் 2 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கி மார்ச் 20 ஆம் தேதி டெல்லி நாடாளுமன்றம் வரை வாகனம் மூலம் யாத்திரையாக செல்ல இருக்கிறார்கள்.

பயண ரூட்
இப்பயணத்தில் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களை சந்தித்து ஆதரவு கேட்கவும் முடிவு செய்துள்ளார்கள். வரும், 2ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து தொடங்கும் இந்த பயணத்தை மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ துவக்கி வைக்கிறார்.

துரை வைகோ
விவசாயிகள் நடத்தும் 'நீதி கேட்டு நெடும் பயணம்' துவக்க விழா நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களை சேர்ந்த மதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்க உள்ளார்கள். இதனிடையே முதலில் வைகோ தான் இந்தப் பயணத்தை தொடங்கி வைப்பதாக இருந்தது. அவரது உடல்நலம் கருதி துரை வைகோ விவசாயிகள் பயணத்தை துவக்கி வைக்க கன்னியாகுமரி செல்கிறார்.












Click it and Unblock the Notifications