Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தப்புத்தாளம்".. 2 முறை "படிதாண்டிய" மனைவி.. பெட்ஷீட்லயே பிரிந்த உயிர்.. பரிதாப கணவன் + குழந்தைகள்

கன்னியாகுமரியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: அன்பான கணவன், அழகான குழந்தைகள் இருந்தும்கூட, ஷாமினி ஏன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தற்கொலை முடிவை எடுத்தார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

குளச்சல் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி.. 29 வயதாகிறது.. அதே ஊரை சேர்ந்தவர் சூசைநாதன்.. 36 வயதாகிறது. ஷாமினியின் கணவர் பெயர் ராஜேஷ்.. இந்த தம்பதிக்கு 7 மற்றும் 3 வயதுள்ள 2 மகன்கள் இருக்கிறார்கள்..

அதேபோல சூசைநாதனுக்கும் 4 வருடம் முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஷாமினிக்கும், சூசைநாதனுக்கும் கள்ளக்காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம், சூசைநாதனின் மனைவிக்கு தெரிந்துவிட்டது.. அதனால், கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டுக்கு போய்விட்டார்..

 சர்ச் வாசலிலேயே

சர்ச் வாசலிலேயே

இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி ஷாமினி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்.. பிறகுதான், நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அங்கேயே அவர்களது கார் நின்று கொண்டிருந்தது.. அந்த கதவை போலீஸார் திறந்து பார்த்தபோது, ஷாமினியின் இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தன.. பிறகு காரில் இருந்து குழந்தைகளை போலீஸார் பத்திரமாக மீட்டு விசாரணையை துவக்கினர்..

ஷாமினி

ஷாமினி

சூசைநாதன் டிராவல்ஸ் ஒன்றில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார். சூசைநாதனுக்கும், அவருடைய மனைவிக்கும் திருமணம் ஆனதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில்தான் ஷாமினியை சந்தித்துள்ளார். அதாவது ஷாமினியின் குழந்தைகளை, சூசைநாதன்தான் ஸ்கூலுக்கு காரில் அழைத்துச் செல்வது வழக்கமாம்.. அப்போதுதான் ஷாமினியுடன், நெருங்கி பழகியதோடு மனம் விட்டு பேசியுள்ளார்... மனைவி டார்ச்சரை எல்லாம் சொல்லி புலம்பி இருக்கிறார்.. இந்த நெருக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறி உள்ளது.. கடைசியில் இவர்களால் பிரிந்து வாழ முடியவில்லை.. நெருக்கம் அதிகமாகி கொண்டே வரவும்தான், சூசைநாதனின் மனைவி கோபித்துக் கொண்டு போய்விட்டார்..

லாட்ஜ்ஜூக்குள்

லாட்ஜ்ஜூக்குள்

இந்த சூழலில்தான், வெளியூருக்கு சென்று நிம்மதியாக வாழலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்துள்ளது.. ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டை விட்டு கிளம்பி வந்த நிலையில், காரிலேயே ஊர் ஊராக இவர்கள் சுற்றி வந்துள்ளனர்.. இந்த ஒரு மாதமும், குழந்தைகளும் இந்த ஜோடியுடனேயே காரில் பயணித்து வந்துள்ளனர்.. பல இடங்களுக்கு சென்று இருவரும் சந்தோசமாக இருந்துள்ளனர்... பகலெல்லாம் காரில் சுற்றி திரிந்துவிட்டு, இரவு நேரங்களில் சர்ச் மற்றும் லாட்ஜ்களில் தங்கி வந்திருக்கிறார்கள்.. இதற்கிடையே போலீசார் தங்களை தேடுவதை கேள்விப்பட்டனர்.. குடும்பத்தாரிடம் சிக்கினால் மனம்விரும்பியதுபோல் வாழ முடியாது என்று முடிவு செய்தனர்.. கையில் உள்ள பணமும் தீர்ந்து கொண்டே வந்துள்ளது..

 தரையில் போர்வை

தரையில் போர்வை

பிறகுதான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.. சம்பவத்தன்று தேவசகாயம் மவுண்ட் சர்ச் பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.. தன்னுடைய 2 மகன்களுக்கும் சாப்பாடு தந்துவிட்டு, காரில் வசதியாக படுக்க வைத்துள்ளார் ஷாமினி.. குழந்தைகளை காரிலேயே தூங்கவைத்துவிட்டு, இருவரும் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை வாங்கி குடித்தார்களாம்.. 2 பேரும் தூங்கிய பிறகு, அவரும் சூசைநாதனும் அதிகாலை 2 மணிக்கு காரில் இருந்து வெளியே வந்துள்ளனர்... சர்ச் வாசலில், தரையில் போர்வையை விரித்து அதில் உட்கார்ந்த இருவரும் அப்படியே தரையில் சாய்ந்துள்ளனர்.. இது தொடர்பான வீடியோ காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது.

 நெருக்கம்

நெருக்கம்

இந்நிலையில், இந்த தற்கொலை சம்பவம் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. சூசை நாதனும், ஷாமினியும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.. ஷாமினியின் கணவர் ராஜேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.. அப்போதுதான், ஷாமினிக்கும் சூசை நாதனுக்கும் நெருக்கம் அதிகமாகி உள்ளது.. கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை சூசைநாதனுக்கு செலவு செய்து வந்துள்ளார் ஷாமினி.. அந்த பணத்தில்தான், கார்கள் வாங்கி டிராவல்ஸ் நிறுவனத்தையே சூசைநாதனுக்காக ஷாமினி வைத்து கொடுத்தாராம்.. அதற்கு பிறகுதான், சூசைநாதனுக்கு திருமணமாகி உள்ளது..

ரிட்டர்ன்

ரிட்டர்ன்

ஆனால், திருமணமான கொஞ்ச நாளிலேயே கணவரின் நடத்தை பற்றி மனைவிக்கு தெரிந்துவிட்டதால், பெற்றோர் வீட்டிற்கே அந்த பெண் சென்றுவிட்டார். அதன்பிறகு கள்ளக்காதலியுடன் பழக்கத்தை சூசைநாதன் அதிகரித்துள்ளார்... இந்த நேரத்தில்தான் வெளிநாட்டில் இருந்து ராஜேஷூம் ஊர் திரும்பிவிட்டார்.. இதனால், கள்ளக்காதலை தொடர முடியாத ஜோடி தற்கொலை முடிவை எடுத்துவிட்டது என்கிறார்கள். இதனிடையே, கள்ளக்காதல் ஜோடியின் 2 உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது..

 ஏகப்பட்ட பெண்கள்

ஏகப்பட்ட பெண்கள்

இதில், ஷாமினியின் கணவர் ராஜேஷ் மற்றும் உறவினர்கள் வந்து, ஷாமினியின் சடலத்தை பெற்றுக் கொண்டு போனார்கள்.. ஆனால் சூசைநாதன் தரப்பில் யாருமே வரவில்லையாம்.. அவரது மனைவிக்கு போலீசார் தகவல் கொடுத்தபோதும், சரியான பதிலை தரவில்லை என கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால்தான், அவரை பிரிந்து வந்ததாக அந்த பெண் சொன்னாராம்.. இந்த சம்பவம் நடந்து முடிந்த நிலையில், ஷாமினியின் உறவினர்கள் கோபத்திலும் சோகத்திலும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள்..

 கதறல் கதறல்

கதறல் கதறல்

அதாவது, கள்ளக்காதலில் சிக்கிய ஷாமினி, ஏற்கனவே ஒருமுறை வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்றவராம்.. ஆனால் சில நாட்களில் அவர் வீடு திரும்பிய நிலையிலும், கணவர் ராஜேஷ் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டாராம். ஆனால் அதனை மறந்து கடந்த 17-ந் தேதி மறுபடியும் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் ஷாமினி என்கிறார்கள்.. அன்பான கணவன், அழகான குழந்தைகள் என நல்ல வாழ்க்கை அமைந்தபோதும் அதனை கெடுத்து கொண்டதே ஷாமினிதான்.. இப்போது 2 குழந்தைகளையும் கதறி நிற்கின்றன என்று கண்ணீருடன் சொல்கிறார்கள்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+