மும்பை மாணவியிடம்.. கன்னியாகுமரி அப்பா மகன் செய்த அசிங்கம்.. வளசரவாக்கத்தில் வசமாக சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித் என்பவரும், அவரது தந்தையும் சேர்ந்து, மும்பையைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவியின் அந்தரங்க படத்தை இன்ஸ்டாகிராமில் பரவ விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சென்னை வளசரவாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மும்பை பெண் அளித்த புகார் பற்றி பார்ப்போம்.
மும்பையை சேர்ந்த 23 வயது பெண் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். கல்லூரி மாணவியான அவருக்கு சென்னை வளசரவாக்கத்தில் உறவினர் வீடு ஒன்று உள்ளது. இதன் காரணமாக மும்பை கல்லூரி மாணவி தனக்கு விடுமுறை விடும்போது எல்லாம் வளசரவாக்கத்தில் உள்ள தனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கமாம். இந்த நிலையில், அந்த மும்பை கல்லூரி மாணவி சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் அண்மையில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் மும்பை மாணவி கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 27 வயதாகும் சுஜித் என்பவர் பழக்கமானார். அவர் என்னுடைய அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்திருக்கிறார். அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவோம் என்று கூறி பணம் கேட்டு மிரட்டினார்கள். பணம் அனுப்பி வைத்த பிறகும் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.50 ஆயிரம் கேட்டு அவரது தந்தையும் சேர்ந்து மிரட்டினார். நான் பணம் இல்லை என்று அவர்களிடம கூறியதால், தனது அந்தரங்க புகைப்படத்தை சுஜித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விட்டார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி கூறியிருந்தார்.
இதையடுத்து சென்னை வளசரவாக்கம் போலீசார், தந்தை மகனை அழைத்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், கல்லூரி மாணவி கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா மேக்கோடு பகுதியை சேர்ந்த சுஜித் என்பவரையும், அவரது தந்தை வின்சென்ட் (55) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், சுஜித் பிளஸ்-2 படித்தவர் என்பதும், முதலில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக பணியாற்றிவிட்டு, பிறகு மாவுக்கடை ஒன்றில் வேலையும் பார்த்திருக்கிறார். அவரது தந்தை வின்சென்ட் கூலித் தொழிலாளி ஆவார். இருவரும் மும்பை பெண்ணை அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டி பரப்பிய குற்றத்திற்காக சிறையில் கம்பி எண்ணி வருகிறார்கள். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
-
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
3 ஓவரில் 3 விக்கெட், 34 பந்துகளில் 66 ரன்கள்.. சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ருத்ரதாண்டவம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications