சொல்லாமல் வீட்டை விற்ற கணவன்.. வெளியேற மறுத்த மனைவி.. திடீரென சிலிண்டரை திறந்துவிட்ட கொடூரம்
புதிதாக வாங்கிய வீட்டிற்குள் கணவன் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சல் பகுதியில் தனது வீட்டை விற்ற நபர், இந்த தகவலை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இது தெரியாமல் வீட்டை வாங்கிய நபர், அங்கிருந்தவர்கள் வெளியேற மறுத்ததால் மனைவியுடன் வீட்டிற்குள் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர்
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவருக்கு மனைவி மற்றும் 11 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சோமு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தெரியாமல், குடியிருந்த வீட்டை அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மனைவிக்கு தெரியாமல் வீட்டை மணிகண்டனுக்கு எழுதிக் கொடுத்த சோமு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டன், மனைவியுடன் வாங்கிய வீட்டில் குடியேற வந்திருக்கிறார். ஆனால் சோமுவின் மனைவி பெனிலா மற்றும் குழந்தைகளுக்கு வீட்டை விற்பனை செய்த விவரம் தங்களுக்கு தெரியாது என்றனர். அத்துடன் மணிகண்டன், மனைவி மற்றும் குழந்தைகளிடம் அழுது தகறாறில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வீட்டை விலைக்கு வாங்கிய மணிகண்டன் மற்றும் அவரது மனைவியுடன் திடீரென வாங்கிய வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி விட்டு சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தனர், இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியினர் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் களியக்காவிளை போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், கதவுகளை உடைத்து மணிகண்டன் மற்றும் அவரது மனைவியை வீட்டின் வெளியே அழைத்து வந்தனர். இன்று இருவரும் வீட்டிற்கு செல்லுங்கள். நாளை காவல் நிலையம் வாருங்கள் , பேசிக் கொள்ளலாம் என பேசி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications