கன்னியாகுமரியில் பெண்ணை அலேக்காக தூக்கி குத்தாட்டம்..பத்மநாபபுரம் அரண்மனையில் அந்த 2 பேர்? பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்துள்ள சம்பவமானது, சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் பாய்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனையும் ஒன்றாகும்.. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர், கேரளா கட்டிட கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த அரண்மனையை வடிவமைத்தார்.

இந்த பிரம்மாண்டமான அரண்மனை தக்கலைக்கு அருகே உள்ள பத்மநாபபுரத்தில் உள்ளது. சுமார் 470 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனை குமரி மாவட்டத்தில் இருந்தாலும் கேரள மாநில அரசின் தொல்லியல் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பயணிகள் வருகை: இதை பார்வையிடுவதற்காக வெளிநாடு, வெளிமாநிலம், உள்ளூர் என பல்வேறு பகுதிகளிலிருந்து, தினந்தோறம் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களுக்கு அரண்மனையின் ஒவ்வொரு அறைகளில் காணப்படும் சிறப்புகளை பற்றி எடுத்து சொல்வதற்காகவே, ஒவ்வொரு அறைகளிலும் ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரண்மனைக்கும் வரும் சுற்றுலாப்பயணிகள் அரண்மனையின் கட்டிடக்கலை நுட்பங்களையும், மன்னர் காலத்தில் அவர்கள் பயன்படுத்தி வந்த வாள், கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும், நாடகசாலை, நான்கடுக்கு மாளிகை, அன்னதான மண்டபம் போன்ற பழங்காலத்து கட்டடங்களையும் பார்வையிட்டு மகிழ்ந்து செல்வார்கள்..
பத்மநாபபுரம் அரண்மனை: இந்த அளவுக்கு பாரம்பரியமும், வரலாற்று முக்கியத்துவமும் கொண்ட பத்மநாபபுரம் அரண்மனையில், குத்தாட்டம் போட்டு, பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் ஊழியர்கள்.
இந்த அரண்மனை அலுவலகத்தில் முதல்முறையாக பாரம்பரிய விதிகளை மீறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்துள்ளது.. அப்போது, ஆண் ஒருவர், பெண் ஊழியரை கையில் தூக்கி உற்சாகமாக டான்ஸ் ஆடியிருக்கிறார்.. இந்த குத்தாட்ட வீடியோவை, அங்கிருந்தவர்களே, வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டனர்.. இதைப்பார்த்து இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த வீடியோ அதிகாரிகளின் பார்வைக்கும் சென்றுள்ளது..
ஊழியர்கள்: அந்த வீடியோவில், ஆண்கள், பெண்கள் என ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.. இதற்காக அலுவலகத்தில் பலூன்கள், வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.. பிறகு ஊழியர்கள் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, கைகளை தட்டி, நடனமாடுகிறார்கள்..
அப்போது உற்சாகமிகுதியில், அங்கிருந்த ஊழியர் ஒருவர் தன்னுடைய அருகில் நடனமாடி கொண்டிருந்த பெண் ஊழியரை, தன்னுடைய இரு கைகளாலும் அள்ளிக்கொண்டு நடனமாடுகிறார்.. இதற்கு அந்த பெண் ஊழியர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சிரித்து கொண்டேயிருக்கிறார்.. இதைப்பார்த்த மற்ற ஊழியர்கள் அனைவரும், கைகளை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.
அதிரடி நடவடிக்கை: இந்த வீடியோ காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்த பத்மநாபபுரம் அரண்மனை நிர்வாகம், டான்ஸ் ஆடிய அந்த 2 ஊழியர்களையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications