கன்னியாகுமரி அருகே சிகிச்சைக்கு போன இடத்தில் நர்சிங் மாணவியுடன் மலர்ந்த காதல்.. போலீசில் தஞ்சம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே சிகிச்சைக்கு சென்ற போது நர்சிங் மாணவியுடன் தொழிலாளிக்கு காதல் மலர்ந்துள்ளது. இவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தார்கள். இந்நிலையில் திருமணம் செய்ய விரும்பிய இந்த ஜோடி, வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை சேர்ந்து வாழுமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே வேர்கிளம்பி முண்டவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இவருடைய மகள் ஸ்ரீவித்யா (வயது 19). ஸ்ரீவித்யா குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இதற்காக கல்லூரியில் தங்கி படித்து வரும் ஸ்ரீவித்யா, வாரம்தோறும் விடுமுறையில் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கமாகும்.

பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்த கபீர் என்பவருடைய மகன் சபீர் (27). இவர் கூலித்தொழிலாளியாவார். கடந்த 6 மாதங்களுக்கு முன் சபீர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்ரீவித்யா படிக்கும் மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. அதன்பிறகு இருவரும் செல்போன் மூலம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளார்கள்.
கடந்த வாரம் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஸ்ரீவித்யா தனது வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.ஆனால் மகள் எங்குமே கிடைக்கவில்லை. இதையடுத்து கிருஷ்ணகுமார், தனது மகளை காணவில்லை என குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவித்யாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சபீரும், ஸ்ரீவித்யாவும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் பின்னர் போலீசார் தேடி வருவதை அறிந்த இருவரும் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து ஸ்ரீவித்யாவின் குடும்பத்தினரும் அங்கு வந்துள்ளனர். அப்போது ஸ்ரீவித்யா போலீசாரிடம், சபீரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் தான் வாழ்வேன் என்று கூறினார். பின்னர் காதல் ஜோடியை போலீசார் சேர்த்து வைத்து அங்கிருந்து அனுப்பினர்.












Click it and Unblock the Notifications