படுக்கை விரிப்பினால் பிரச்சனை... லாட்ஜில் கலாட்டா செய்த மலையாள நடிகை
Recommended Video

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வாடகை பாக்கி கேட்டதால் லாட்ஜில் திரைப்பட நடிகை ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் கடந்த சில வாரங்களாக மலையாள திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர், உதவியாளர்கள் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் அமைந்துள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளனர்.

இவர்கள் தினமும் காலையில் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டு இரவில் லாட்ஜிற்கு திரும்புவது வழக்கம். அதன் படி, படப்பிடிப்பு முடிந்து படத்தின் டைரக்டர் மற்றும் நடிகர் நடிகைகள் லாட்ஜிற்கு திரும்பினார்கள். அப்போது லாட்ஜ் அறைக்க சென்ற மலையாள நடிகை அங்குள்ள படுக்கை விரிப்புகள் மாற்றபடவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்களிடம் நடிகை புகார் செய்தார். அதற்கு லாட்ஜ் ஊழியர்கள் லாட்ஜிற்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி 60,000 ரூபாயை இதுவரை தரவில்லை என்றும் அதனை தரும்படியும் கூறினர். இதை கேட்ட நடிகை தான் இந்த லாட்ஜில் இருந்து கிளம்புவதாக கூறி உடனடியாக அங்கிருந்து புறப்பட முயன்றார்.

அப்போது அவரை தடுத்த லாட்ஜ் ஊழியர்கள் உங்கள் படக்குழுவினரிடம் இருந்து பாக்கியை வாங்கி கொடுத்துவிட்டு இங்கிருந்து கிளம்புமாறு கூறி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மலையாள நடிகை திருவனந்தபுரம் ஆற்றுங்கால் பகுதியை சேர்ந்த மஞ்சு சவேர்கர் என்பது தெரியவந்தது. மேலும் படக்குழுவினர் லாட்ஜ் வாடகைபாக்கியை கொடுப்பதாக ஒப்புக் கொண்டதோடு இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தகராறு முடிவுக்கு வந்தது. இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications