பிரபல "விஐபி" மனைவி..அதைவிடுங்க.. தீர்ப்பின்போது நாகர்கோவில் காசி செய்த காரியம்.. கன்னியாகுமரியே "ஆ"
கன்னியாகுமரி: நாகர்கோவில் காசியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்க்கும் அனைவருமே, ஆச்சரியத்தில் உறைந்து போகிறார்கள்.
காசி என்கிற சுஜி.. 26 வயதிலேயே வாழ்க்கையின் உயரத்தை கண்டதுடன் சிறைக்கும் சென்றுவிட்ட பட்டதாரி இளைஞன்.. இவரது அப்பா நாகர்கோவிலில் சுகுனா சிக்கன் டீலர் ஆவார்.. வசதியான குடும்பம் என்பதால், மகனை அளவுக்கு அதிகமான செல்லம் தந்து வளர்த்திருக்கிறார்கள். பிஞ்சு வயதிலேயே சேட்டையை துவங்கிவிட்டார் காசி..
பெண்கள்: கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, தன் வலையில் சாய்த்துள்ளார்..

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி, அதையும் வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் காசி. 4 மாடிக்கு வீடு கட்டி இருக்கிறார் காசி.. நிறைய சொத்துக்களையும் வாங்கி போட்டுள்ளார்.. 120 பெண்கள், 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டன..
நடிகர் மகள்: எஸ்ஐ மகள் ஒருவரையும் தன் வலையில் வீழ்த்தியதாக சொன்னார்கள்.. ஒரு பிரபல நடிகரின் மகளும், காசியின் பிடியில் விழுந்துவிட்டதாக சொன்னார்கள்.. ஒரு அரசியல்வாதி மனைவியும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளதாக சொன்னார்கள்.. எனவே, இதுதொடர்பான உண்மைகள் விரைவில் வெளிவரக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட விஐபிக்கள், அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் இருந்ததாக, தகவல்கள் பரபரத்தன. ஆனால், அவர்கள் எல்லாம் யார் என்று கடைசிவரை தெரியவில்லை..
அரசியல் தொடர்பு: அரசியல் பெரும்புள்ளிகளின் தொடர்பு காசிக்கு இருந்திருக்கிறது.. அதனால்தான், கட்சியில் ஒரு முக்கியமான பதவிக்குகூட காசி ஆசைப்பட்டானாம்.. ஆனால் சூழலும், நிலைமையும் சரியில்லாததால் அந்த வாய்ப்பு தள்ளி போய்விட்டதாம்.. இவரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் காசி மீது புகார் கொடுக்கவும் வழக்கு பதிவானது.. மாதர் சங்கமும் இந்த விஷயத்தில் தலையிட்டு, சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.. போக்சோவும் பாய்ந்தது. குண்டர் சட்டமும் பாய்ந்தது.
அனைத்து குற்றமும் நிரூபிக்கப்பட்டு, இப்போது நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும் தரப்பட்டுள்ளது. காசிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு வழங்கினார். அவரது மரணம் வரை சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்..
ஹார்ட்டின் காசி: வழக்கமாக, காசியை பற்றி மீடியாக்களில் நினைவுகூரும்போதெல்லாம் அவரது ஒரு போட்டோவும் சேர்ந்தே பலருக்கு நினைவுக்கு வரும்.. அந்த போட்டோ நாகர்கோவில் கோர்ட்டில் அவரை ஆஜர் செய்ய அழைத்து வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஆகும்..
பொதுவாக இப்படி, கைதானவர்களை கோர்ட்டுக்கு வந்தால், தங்கள் முகத்தை கைகளாலோ அல்லது துணியாலோ வெட்கப்பட்டு கொண்டு மறைத்து கொள்வார்கள்.. ஆனால் காசி அப்படி இல்லை.. அங்கிருந்த எல்லா செய்தியாளர்களையும் பார்த்து தன்னுடைய 2 கைகளால் "ஹார்ட்" சிம்பல் காண்பித்தார்... இத்தனைக்கும் அவரது கையில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது.. பக்கத்திலேயே போலீசாரும் நின்று கொண்டிருந்தனர்.. இவர்களையும் மீறி, ஹார்ட்டின் சின்னத்தை, கேமராவை பார்த்து காட்டிக்கொண்டே கோர்ட்டுக்கு போன காசியை பார்த்து இந்த தமிழகமே அதிர்ந்தது.

ஒயிட் & ஒயிட்: ஆனால், இந்த போட்டோவையே ஓவர்டேக் செய்துவிட்டது, காசியின் இன்னொரு போட்டோ.. நேற்றுமுன்தினம், தீர்ப்பை ஒட்டி கோர்ட்டில் ஆஜராகியிருந்தார் காசி.. தீர்ப்பு என்பதால், பதற்றத்துடனும், டென்ஷனும் கோர்ட்டுக்கு வருவார் என்று நினைத்தால், வெள்ளை சட்டை - வெள்ளை வேட்டி அணிந்துகொண்டு, கல்யாணத்துக்கு போவதை போலவே வந்திருந்தாராம்.. நீதிபதி தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், அவரது முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லையாம்.
தீர்ப்புக்கு பிறகு போலீஸ் காவலுடன், ஜெயிலுக்கு புறப்பட்ட காசி, கோர்ட் வாசலில் இருந்து இறங்கியபோது, அரசியல்வாதிபோல அங்கிருந்த எல்லாரையும் பார்த்து 2 கைகளை கூப்பி கும்பிட்டுக் கொண்டே போனாராம்..
அரசியல்வாதி: நீதிமன்ற வரலாற்றிலேயே.. சாகும்வரை ஜெயில் என்ற தீர்ப்பு தந்தபிறகும், எந்த சோகத்தையும், டென்ஷனையும், வருத்தத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், வெள்ளை சட்டை - வெள்ளை வேட்டியுடன் அரசியல்வாதிகளை போலவே, கெத்தாக, வணக்கம் வைத்துக்கொண்டே ஜெயிலுக்கு போன காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications