கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி.. பல அடுக்கு பாதுகாப்பு.. போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை குமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் ரவுண்டானா வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி நாளை 15ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து கன்னியாகுமரி வருகிறார். விமான நிலையத்தில் அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி வரும் பிரதமர் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மைதானத்திற்கு செல்கிறார். காலை 11.15 முதல் 12.15 வரை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்து, பகல் 12.15க்கு அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை கடற்கரை பகுதிகளில் மெரைன் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு வரும் வெளியூர் நபர்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
பொதுக்கூட்டம் நடைபெறும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். நாளை காலை 6 மணி முதல் பொதுக்கூட்டம் முடியும் வரை குமரி ரவுண்டானாவில் இருந்து மகாதானபுரம் ரவுண்டானா வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் 6வது முறையாக வருகிற 18ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, கோவையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். 19ஆம் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 22ஆம் தேதி மதுரைக்கும் வர உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications