"இடுப்பில் துண்டு".. நடுக்கடலில் 45 மணி நேரம் மோடி தொடர் தியானம்! 3 நாட்களுக்கு பிரதமர் உணவு இதுதான்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பாறையில் தொடர்ந்து 45 மணி நேரம் பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார்.. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
மக்களவை இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது... ஜூன் 4-ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியாகிறது..

மக்களவை தேர்தல் முடியும் நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக, 45 மணி நேரம் தியானம் செய்ய உள்ளார்.
142 வருடங்களுக்கு முன்பு, கன்னியாகுமரி கடலிலுள்ள பாறையானது, அன்னை பகவதியம்மன் ஒற்றைக்காலில் தவமிருந்த இடமாகும்.. அம்மனின் பாதச்சுவடு இப்போதும் அங்கிருப்பதாக கூறப்படுகிறது..
காவி உடை: இதே இடத்தில், கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் தவம் இருந்தார்.. எனவேதான், இந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தியானம் செய்ய வசதியாக அங்கு தியானக்கூடம் அமைந்துள்ளது. இங்குதான் பிரதமர் தியானம் மேற்கொள்கிறார்.
இப்படித்தான் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்ததும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல, கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, இமயமலையில் கேதார்நாத் குகையில் தியானம் மேற்கொண்டார்..
தியானம்: இடுப்பில் காவித்துணி, தலையில் பாரம்பரிய உத்தரகாண்ட் தொப்பி என சிறப்பு வழிபாடு செய்து, தொடர்ந்து 17 மணி நேரம் மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார். இப்போதும் அதுபோலவே தியானம் மேற்கொள்கிறார்..
பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வாராம்.. விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமருக்காக சிறப்பு வசதிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும், இப்போதுள்ள குறைந்தபட்ச வசதிகளுடனேயே தியானம் மேற்கொள்ள பிரதமர் விரும்புகிறார் என்றும் விவேகானந்த கேந்திரா பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
சிறப்பு குழுக்கள்: இந்த 3 நாட்களும், பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications