இந்த தேர்தலோடு தி.மு.க.வின் சரித்திரத்துக்கு முடிவுரை எழுதுவோம்... பொங்கி எழும் பொன்.ராதாகிருஷ்ணன்!
கன்னியாகுமரி: இந்த தேர்தலோடு திமுகவின் சரித்திரத்துக்கு முடிவுரை எழுதப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1969-ம் ஆண்டு காமராஜருக்கு என்ன துரோகம் காங்கிரஸ் செய்ததோ அதை இந்த தேர்தலில் காங்கிரஸ் அனுபவிக்க போகிறது என்றும் அவர் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதிக்கான பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். இந்த கூட்டம் முடிந்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. முன்பு இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்தவர் இந்திரா காந்தி. எனவே சோனியா காந்தி அவரை பார்த்து கேட்க வேண்டும். பிரதமர் மோடியின் தேசபக்தி, நெஞ்சுறுதியை மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டிற்கு ஆதரவாக கருத்து கூறுவதாக இருந்தாலும் சரி, செயல்படுவதாக இருந்தாலும் சரி பிரதமர் மோடிக்கு நிகர் யாரும் இல்லை.
திமுக ஒரு காலத்தில் அடைந்தால் திராவிட நாடு என்று கூறியது. அது இதுவரை அடைய முடிய வில்லை, இன்று விடிந்தால் அடையும் என்கிறார்கள். எப்படி அன்று திராவிட நாடு அடைய வில்லையோ அது போல் இனிமேல் திமுகவுக்கு விடியலே இல்லை. திமுகவின் சரித்திரத்துக்கு இந்த தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்.
தமிழகத்தில் இரட்டை காளைகளான திமுகவும், காங்கிரசும் இந்த தேர்தலோடு வெளியேறும் நேரம் வந்து விட்டது. 1969-ம் ஆண்டு காமராஜருக்கு என்ன துரோகம் காங்கிரஸ் செய்ததோ அதை இந்த தேர்தலில் காங்கிரஸ் அனுபவிக்க போகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications