கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டேப்லெட் உடைஞ்சுரும்.. மாணவர்களுக்கு லேப்டாப் தான்! ஹாப்பி நியூஸ் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : தேர்தல் அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரம் ஆகும் என்பதை கருதி மீண்டும் மடிக்கணினி கொடுக்க திட்டமிட்டுள்ளோம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Recommended Video

    நம்முடைய பெருமை சர்வதேச அளவுக்கு போக வேண்டும் - Anbil Mahesh *Politics

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை திமுக நிர்வாகிகள் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளரும் நாகர்கோயில் மேயருமான மகேஷ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

    கல்வி தொலைக்காட்சி சிஇஓ பணிக்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வி தொலைக்காட்சி சிஇஓ பணிக்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அன்பில் மகேஷ்

    அன்பில் மகேஷ்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," போதை விழிப்புணர்வு குறித்து தமிழகத்தில் கடந்த 10 வருட காலமாக கண்டு கொள்ளாத நிலையில் தற்போது முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு போதை தடுப்பு விழிப்புணர்வை மாணவர்களிடம் கொண்டு செல்லும் பணியை தீவிரமாக தொடர்ந்து வருகிறது.

     மதுக் கடைகள்

    மதுக் கடைகள்

    தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி துறை ரீதியாக தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் முதற்கட்டமாக மதுக்கடையை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுக்கடைகள் அகற்றம் வழிபாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளும் கண்டிப்பாக அகற்றப்படும்.

     மடிக்கணினி

    மடிக்கணினி

    இதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில், மாணவர்கள் கவனக்குறைவாக பயன்படுத்தினால் டேப் சேதாரம் ஆகும் என்பதை கருதி மீண்டும் மடிக்கணினி கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

    தீவிர நடவடிக்கை

    தீவிர நடவடிக்கை

    கடந்த ஆட்சியில் 2 லட்சம் மடிக்கணினிகள் மாணவர்களுக்கு கொடுக்காமல் விட்டு சென்றுள்ளனர். அதனையும் சேர்த்து கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளோம். இந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை புதிதாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளை நவீன முறையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என பேசினார்.

    English summary
    Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that they are planning to give laptops to the students again ; மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X