ஆஸ்பத்திரி வாசலில் தூங்கிய நோயாளியின் அம்மா.. நடுராத்திரி சீண்டிய வாட்ச்மேன்.. குமரியில் பரபரப்பு

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆஸ்பத்திரி வாசலில் தூங்கிய நோயாளியின் அம்மா..நடுராத்திரி சீண்டிய வாட்ச்மேன்..குமரியில் பரபரப்பு

    கன்னியாகுமரி: நடுராத்திரி.. ஆஸ்பத்திரி வாசலில் தூங்கி கொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்து பாலியல் சீண்டல் தந்த செக்யூரிட்டியை பார்த்ததும் அலறி அடித்து எழுந்துவிட்டார் அந்த பெண்!

    அரசு ஆஸ்பத்திரி என்று எந்த வகையிலும் நம்பி உள்ளே போக முடியாத வகையில், சில சம்பவங்கள் அதிர்ச்சியை தந்துவிடுகின்றன.

    sexual harssment in gov hospital

    கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியானது, நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இங்கு காஞ்சாம்பரம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு உடம்பு சரியில்லாததால், சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் அந்த சிறுமியுடன் அவளுடைய அம்மாவும் கூடவே இருந்து கவனித்து கொள்கிறார்.

    சம்பவத்தன்று இரவு, சிறுமி நன்றாக தூங்கிவிட்டதால், கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று அம்மாவும், அந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தின் வெளியே வந்து படுத்து தூங்கினார். அப்போது ஆஸ்பத்திரியின் செக்யூரிட்டி, சிறுமியின் தாயிடம் வந்து வேலையை காட்டி உள்ளார்.

    நடுராத்திரி பக்கத்தில் ஒரு இளைஞன் பாலியல் தொந்தரவு கொடுக்கவும் அலறி அடித்து எழுந்து சத்தம் போட்டார் அந்த பெண்.. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் எல்லோரும் விழித்து கொண்டனர், ஓடிவந்து செக்யூரிட்டியை பிடித்து போலீசிலும் ஒப்படைத்தனர்.

    விசாரணையில், அந்த செக்யூரிட்டி நாகர்கோவில் கட்டையன் விளையை சேர்ந்த ஆனந்த் என்பது தெரிய வந்தது. தனியார் நிறுவனத்தை சேர்ந்த செக்யூரிட்டிகளில் இவரும் ஒருவர் என்பது தெரியவந்தது.பின்னர் போலீசார் ஆனந்தை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்னாடிகூட, ரவுடி ஒருத்தன், இதே அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற வெளி மாநில சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கைது செய்யப்பட்டார். இப்போது, சிறுமியின் தாயிடம் மீண்டும் பாலியல் தொந்தரவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+