கேவலம்.. பெண்களை இழிவு செய்தவரின் செயலை நியாயப்படுத்தலாமா? - அமைச்சரை விளாசிய பாஜக மகளிர் அணி!
கன்னியாகுமரி : உத்தமவேடதாரி மனோ தங்கராஜ், ஊருக்கு உபதேசம் செய்யலாமா என்று தமிழக பாஜக மகளிர் அணி கடுமையாக விமர்சித்துள்ளது.
சைதை சாதிக் பேச்சு தொடர்பாக எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்பு வலியுறுத்திய நிலையில், தன்னைப் பற்றி பொய்யான தகவல் பரப்பப்படுவதாகத் தெரிவித்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
சென்னையில் நடந்த திமுக பொதுக் கூட்டம் ஒன்றில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு, கௌதமி, காயத்ரி ரகுராம், நமீதா ஆகியோரைப் பற்றி அவதூறாக பேசியது கடும் கண்டனங்களைக் கிளப்பியது.
சைதை சாதிக் பேசிய அந்தக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜூம் பங்கேற்றிருந்தார். அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி இப்படி பேசுகிறார் அதையும் அமைச்சர் கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

விடவேமாட்டேன்
இச்சம்பவத்திற்கு திமுக எம்.பி கனிமொழி வருத்தம் தெரிவித்த நிலையில், சைதை சாதிக்கும் தான் பேசியது திரிக்கப்பட்டதாகவும், தவறாகப் பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். எனினும், பாஜக மகளிரணி சார்பில் சமீபத்தில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சைதை சாதிக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், நடிகை குஷ்பு, சைதை சாதிக் பேசும்போது கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்கும் வரை இந்த விவகாரத்தை விடமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

மனோ தங்கராஜ்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் அந்த மேடையில் குஷ்புவை பற்றி பேசியபோது நான் கைதட்டி ரசித்து சிரித்ததாக சொல்வது அப்பட்டமான பொய். பாஜகவிற்கு வேறு விவகாரங்கள் கிடைக்காததால் இதை பெரிதாக்க நினைக்கிறார்கள், குஜராத்தில் வீடு புகுந்து ஆண்களை கொலை செய்துவிட்டு, கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனை முடிவதற்குள் பாஜக அரசால் விடுதலை ஆகி வந்தபோது குற்றவாளிகளுக்கு வரவேற்பு அளித்த பாஜக கட்சியினருக்கு பெண்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு தகுதியே இல்லை எனத் தெரிவித்தார்.

பாஜக மகளிரணி விளாசல்
இந்நிலையில், மனோ தங்கராஜை கடுமையாக விமர்சித்து பாஜக மகளிர் அணி அறிக்கை விடுத்துள்ளது. தமிழக பாஜக மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவுக்கு பெண்கள் பற்றி பேச என்ன தகுதி என்று கேட்டிருக்கும் மனோ தங்கராஜ் பெண்கள் விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பது கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தெரிந்த செய்தி. சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரிலே, அமைச்சர் மனோ தங்கராஜிடம், உதவி கேட்டு வந்த இளம் விதவைப் பெண்ணை, தன் சாகச வலையில் வீழ்த்த நினைத்த சம்பவத்தின் ஆதாரங்கள் எல்லாம் வலைதளங்களில் இன்னும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன.

தண்டித்திருக்க வேண்டும்
பெண்மையை கேவலப்படுத்திய சட்டமன்ற உறுப்பினரை, உதவி கேட்ட பெண்ணை உறவுக்கு அழைத்த மனோ தங்கராஜை, தண்டித்திருக்க வேண்டிய திமுக அரசு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்க்கிறது. இன்னும் சொல்லப்போனால் 2021ஆம் ஆண்டு இவருக்கு தேர்தலில் போட்டியிட இடம் தரக்கூடாது என்று வலியுறுத்தி பல பெண்களும், பெண்கள் அமைப்புகளும் போராட்டம் நடத்தியதை தமிழகம் மறந்து இருக்க முடியாது?

சாதிக்கின் செயலை நியாயப்படுத்துகிறாரா
பெண்களுக்காக போராட்டம் நடத்தும் தகுதி, பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என்று, திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தன் அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். தன் அறிக்கை மூலம், பெண்களை இழிவு செய்த சாதிக்கின் செயலை அமைச்சர் நியாயப்படுத்துகிறாரா? தன்னைப் போலவே மகளிரை இழிவு செய்த நபரை வரவேற்கிறாரா? என்ன செய்வது? இனம் இனத்தோடுதானே சேரும்..?

என்ன துணிச்சல் இருந்தால்
கர்மவீர வாழ்ந்த மண்ணில் காமவீர்கள் கூட்டாக களம் காண்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தின் கரும் புள்ளியாகத் திகழும், மனோ தங்கைராஜ், மகளிருக்காகப் பேசுவது ஒநாய் அழுகையைப் போன்றது என்று இம்மாவட்ட மகளிர் அறிவார்கள். தவறு செய்பவர்களைவிட, அதற்குத் துணை நிற்பவர்களை, அதிகம் தண்டிக்க வேண்டும். என்ன துணிச்சல் இருந்தால், சாதிக் போன்ற நபர் தமிழ்ச் சமூகத்தில் உயர் மதிப்பில் பொற்றப்படும் பெண்களை, கேவலப்படுத்துவார். அந்த அவலத்திற்கு தங்கராஜ் போன்ற அமைச்சர்கள் துணை நிற்பார்கள்.

காப்பாற்ற நினைக்கிறாரா?
இதைக் கண்டிக்க வேண்டிய கட்சித்தலைவர், ஆட்சித் தலைமையில் இருக்கும் போது கூடுதல் பொறுப்புடன் நடவடிக்கை எடுப்பாரா அல்லது கண்டும் காணாததும் போல் இருப்பாரா? பெண்களை தரக்குறைவாக கண்ணியமற்ற வகையிலே சொல்லத் தகாத வார்த்தைகளால், திமுகவின் பொதுக்கூட்டத்தில் சாதிக் என்பவர் கேவலமாக விமர்சிக்கிறார். பெண்மையை இழிவுபடுத்தும் வகையிலே பேசும் இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் அச்சப்படுகிறாரா அல்லது அவரை காப்பாற்ற நினைக்கிறாரா என்று சந்தேகப்படும் அளவிற்கு தமிழக முதல்வர் மௌனம் காக்கிறார்.

பெண்ணுரிமைக்காக
பெண்களுக்காக பெண்ணுரிமைக்காக குரல் கொடுப்போம் என்று பேசும் கனிமொழி அவர்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கட்சியை வலியுறுத்தி இருக்க வேண்டாமா? பெண்மையை பழித்தவனை கண்டிக்காமல், தண்டிக்காமல் சமுதாயத்தில் சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, சம்பந்தமில்லாத கனிமொழி வருத்தம் தெரிவிக்கிறார். வார்த்தைகளால் மான பங்கம் செய்துவிட்டு அதற்கு வருத்தம் தெரிவிக்காமல் மன்னிப்பு கேட்காமல் இருக்கும் அந்த நபரை தண்டிக்க வேண்டாமா?

உண்மையான தேசபக்தர்
கருங்கலில் பிறந்த காரணத்தால் கன்னியாகுமரி கனிமவளங்கள் எல்லாம் தன்னுடைய சொந்த சொத்தாக நினைப்பவர் மனோ தங்கராஜ். அரசின் உத்தரவுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு கன்னியாகுமரியின் கனிம வளங்களை கொள்ளை அடித்து வரும் அமைச்சர், பாஜகவுக்கு என்ன தகுதி என்று கேட்பது வியப்பூட்டுகிறது? பேதைப் பெண்களை போகப் பொருளாக்க நினைக்கும் திமுகவின் கல்குவாரி கொள்ளையர்கள் எல்லாம், பெண்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பேசும்போது, ஒரு பச்சைத் தமிழர், கண்ணியமான காவல் பணியில் உயர் பொறுப்பில் இருந்தவர், உண்மையான தேச பக்தர், ஆகச்சிறந்த சிந்தனையாளர், வருங்காலத் தமிழகத்தின் ஒளிவிளக்கு. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர், அண்ணாமலைக்கும், பாஜகவுக்கும், பெண்களுக்காகப் போராடவும், பரிந்து பேசவும் ஆயிரம் தகுதிகள் உண்டு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications