ஓடுற ரயில்ல என்ன ரீல்ஸ் வேண்டி கிடக்கு.. கன்னியாகுமரி ஷகீலாவுக்கு என்னா அடி! இப்போ சாரி கேட்டுட்டாங்க
கன்னியாகுமரி: ஓடும் ரயிலில் படிகட்டுகளில் நின்று ஆபத்தான முறையில் ஆட்டம் போட்ட 'இன்ஸ்டா ஷகிலா' என்ற பெண்ணின் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்ட நிலையில், ரயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ரயில் படிக்கட்டில் நின்று நடனமாடி போட்ட வீடியோ, கேசுவலாக விளையாட்டுக்கு பண்ண வீடியோ எனவும், இப்படி சீரியஸ் ஆகும் என எதிர்பார்க்கவில்லை என மன்னிப்பு கேட்டு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா பானு. இவர் இன்ஸ்டா மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்களை ரீல்ஸாக பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.
அதில் ரயிலில் நின்று படிக்கட்டில் தனது ஆபத்தினை உணராமல் நடனமாடி ரீல்ஸ் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

ரயில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஷகிலா பானு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இந்த வீடியோ இளைஞர்களை போல ஆபத்தான பயணத்தில் ஊக்குவிக்கும் வண்ணத்தில் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் மற்றும் அவரது சமூக வலைதளங்களில் பின் தொடர்வோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இவர் மீது ரயில்வே போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலுத்திருந்தது.
ரீல்ஸ் மோகம் - ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்று ஆபத்தான ஆட்டம் போட்டு இன்ஸ்டாவில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இளம்பெண்.!
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) June 1, 2025
இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளவாசிகள் கருத்து.#Kanyakumari #Kanniyakumari#Train #Reels… pic.twitter.com/YLdW5EBZMc
இந்த நிலையில் ரயில்வே போலீசார் சகிலா பானுவை வலைவீசி தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷகீலா பானு ரயில் படிக்கட்டில் நின்று போட்ட வீடியோ கேஷுவலாக விளையாட்டுக்கு பண்ண வீடியோ தான் எனவும் மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இருப்பினும் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் கோரிக்கையை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஷகீலா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில்," நான் எப்போதும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுவது வழக்கம். அப்படித் தான் விளையாட்டாக இந்த வீடியோவையும் எடுத்து போட்டேன். ஆனால் அது இவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என எனக்கு தெரியவில்லை. விளையாட்டாக செய்தது வினையாகி விட்டது. இந்த வீடியோ போட்ட பிறகு என்னால் வெளியே கூட வர முடியவில்லை. பேப்பர்கள் சமூக வலைதளங்கள் தொலைக்காட்சிகளில் எனது வீடியோவை தலைப்பு செய்தி ஆக்கிவிட்டார்கள்.
ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட ரீல்ஸ் - மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு.
— Kᴀʙᴇᴇʀ - தக்கலை கபீர் (@Autokabeer) June 2, 2025
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்த ஷகிலா பானு.
ஓடும் ரயிலில் படியில் நின்று ஆட்டம் போட்ட ரீல்ஸ் வைரலாக,
இப்பெண் மீது ரயில்வே துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என… https://t.co/9DVKDrOWyf pic.twitter.com/w9FFPHxaDF
உண்மையில் இதுபோன்று நடக்கும் என எனக்கு தெரியாது. உண்மையில் ஒருவேளை நான் இப்படி போடும் போது ஏதாவது சிலிப்பாகி இருந்தால் என் உயிருக்கே கூட ஆபத்து வந்திருக்கும். கை கால் இல்லாமல் போயிருக்கும். எனவே இளைஞர்கள் யாரும் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம். எனது பழைய வீடியோவையும் டெலிட் செய்து விட்டேன். ஆனாலும் தற்போது அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். தற்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அப்படி செய்ய மாட்டேன். நீங்களும் அப்படி செய்யாதீர்கள்.இந்த வீடியோவை ஷேர் செய்யுங்கள்" எனக் கூறியிருக்கிறார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications