கன்னியாகுமரியில் எந்த கணவனும் பார்க்கக்கூடாத கோலம்.. கல்யாணமான 3 மாதத்திலேயே நிஷா எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பரம்பின் தலை பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி நிஷா. அம்சி பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் என்ற மணிகண்டன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிஷாவும், நிஷாந்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 3 மாதத்தில் கணவரை தொடர்பு கொண்ட போது செல்போனை எடுத்து பேசாததால் கல்லூரி மாணவி எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது.

திருமணம் ஆன புதிதில் கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படுவதற்காக சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.. அந்த கருத்து வேறுபாடுகள் ஏன் ஏற்படுகிறது. எங்கே பிரச்சனை என்பதை ஆராய்ந்து தவறுகளை சரி செய்ய வேண்டும்.கணவன் மனைவி இருவருமே கருத்து வேறுபாடுகளின் போது கோபத்தில் பேசும் வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ஒருவரை ஒருவர் புரிந்து தவறுகளை உணர்ந்து விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். இருவரும் மாறி மாறி விட்டுக்கொடுக்க தொடங்கினால் பிரச்சனையே வராது. மாறாக சரியாக புரிந்து கொள்ளாமல் தவறான முடிவெடுப்பது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியான ஒரு சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

What decision did a college student in Kanyakumari make after her husband failed to answer his phone

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பரம்பின் தலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகண்டன். இவருடைய மனைவி உஷா. இவர்களுடைய மகள் நிஷாவுக்கு 19 வயது ஆகிறது. கல்லூரி மாணவி ஆவார். அம்சி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மணிகண்டன், மர வேலை செய்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிஷாவும், நிஷாந்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு நிஷா குழித்துறையில் வேறொரு வீட்டில் கணவர் நிஷாந்துடன் வசித்து வந்துள்ளார் இந்தநிலையில் நிஷாந்த் வெளியூர் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது நிஷா, கணவரின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நிஷாந்த் போனை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

உடனே நிஷா, தனது தாய் உஷாவிடம் தெரிவிக்க அவரும் மருமகனின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கும் எதிர் தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் இல்லை என கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத நிஷா, தான் விரும்பி மணந்த காதலன் தனக்கு உரிய மரியாதையை கொடுக்காமல் அலட்சியப் படுத்துகிறாரோ? என்ற எண்ணத்தில் திடீரென விரக்தி அடைந்து தவறான முடிவெடுக்க தொடங்கினார்.

அதாவது வீட்டுக்குள் சென்று அங்குள்ள அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உடனே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த புதுப்பெண் கணவன் செல்போனை எடுத்து பேசாத காரணத்திற்காக உயிரை விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+