'சொன்னபடி கேளு' மக்கர் பண்ணாதே.. மைக்கால் நொந்து போன சீமான்.. கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: 'சொன்னபடி கேளு' மக்கர் பண்ணாதே என்று மைக்குடன் சீமான் போராடினார்...கன்னியாகுமரி ஆலய சந்திப்பு பகுதியில் சீமான் பேச முற்பட்ட போது 'மைக்' திடீரென மக்கர் செய்ததால் உடனே அவர் சவுண்ட் ஆபரேட் செய்த நபரை திரும்ப திரும்ப பார்த்து என்னப்பா இது என்ற பாணியில் கண்ணாலேயே கேள்வி கேட்டார்.

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கிடைத்தது. எங்கும் வெற்றி பெறவில்லை என்றாலும், பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது. வாக்கு சதவீதத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித்தது. 2021 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னம் மூலம் 6.72% வாக்குகளை பெற்றது.

When Seeman tried to speak at Kanyakumari temple junction area the Mike suddenly broke down

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு 2024 லோக்சபா தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. முதலில் வந்து கேட்டவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதேநேரம் நாம் தமிழர் கட்சியும் மைக் சின்னத்திற்காக தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு போராடியது. ஆனால் சீமானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கரும்பு விவசாயி சின்னத்திற்கு பதில் 'மைக்' சின்னத்தை தேர்தல் ஆணையம் இந்த முறை ஒதுக்கியுள்ளது. முதலில் இதனை ஏற்க தயங்கிய சீமான், பின்னர் அந்த சின்னத்தை ஏற்றுக்கொண்டு தீவிரமாக பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.

இந்தநிலையில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் இருந்து சீமான் பிரசாரத்தை தொடங்கினார். கன்னியாகுமரி ஆலய சந்திப்பு பகுதியில் நேற்று சீமான் பேச முற்பட்ட போது 'மைக்' திடீரென மக்கர் செய்தது. உடனே அவர் சவுண்ட் ஆபரேட் செய்த நபரை திரும்பி, திரும்பி பார்த்தார். 3 முறை இதே நிலை ஏற்பட்டது.

கோவையில் வேட்புமனு விவகாரத்தில் அண்ணாமலையை அதிர வைத்த நாதக வேட்பாளர் கலாமணி.. யார் தெரியுமா?


இதையடுத்து கோளாறு ஏற்பட்ட 'மைக்' திரும்ப பெறப்பட்டு வயர் இணைப்புடன் பயன்படுத்தும் 'மைக்' சீமானிடம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு சீமான் தொடர்ந்து பேசி பிரசாரத்தை தொடங்கினார். சின்னத்தால் பிரச்சினை எழுந்த நிலையில் ஒதுக்கப்பட்ட மைக் சின்னமும் மக்கர் பண்ணுதே என்று நாம் தமிழர் கட்சியினர் நொந்து போனார்கள்.

இதனிடையே தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய சீமான், தேர்தலில் போட்டியிட டெபாசிட்டுக்கு கூட பணம் இல்லாத தங்களிடம் சோதனை மேற்கொள்கிறார்கள்.. ஆனால் தெருத்தெருவாக காசு கொடுப்பவர்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். எளிய பிள்ளைகள் நாங்கள்.. மாற்று அரசியலை முன்வைத்து செயல்படுகிறோம்.. ஆனால் இங்கு காசு கொடுக்கும் நிலை இன்றும் தொடர்கிறது.. அறிவார்ந்த தமிழ் மக்களே... நீங்கள் சிந்தித்து பாருங்கள்.. வரும் போது எங்களை சோதிக்கிறார்கள்.. டெபாசிட்டுக்கு கூட பணம் இல்லாத எங்களை சோதிக்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+