பொன்னாரை 2வது முறையாக வீழ்த்திய விஜய் வசந்த்.. குமரி எம்பி வசந்த் & கோ உரிமையாளரின் முழு ‛பயோ’
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மீண்டும் எம்பியாகி உள்ளார். வசந்த் அண்ட் கோவின் உரிமையாளரான மறைந்த வசந்தகுமாரின் மகனான விஜய் வசந்தின் பயோ டேட்டா பின்வருமாறு:
கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் வேட்பாளருமான விஜய் வசந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை 2வது முறையாக வீழ்த்தி உள்ளார்.

கன்னியாகுமரி.. தமிழ்நாட்டில் எப்போதும் தேசிய கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி. தமிழகம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கு செல்வாக்கு இருந்தாலும் கூட கன்னியாகுமரியில் இன்னும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
இதனால் தான் திமுக, அதிமுக என எந்த கூட்டணியில் காங்கிரஸ், பாஜக இருந்தாலும் அந்த கட்சிகளுக்கு கன்னியாகுமரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் தான் எப்போதும் கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் என்றால் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாக போட்டி நிலவுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.
1.79 லட்சம் வித்தியாசம்.. கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் தோல்வி! மீண்டும் விஜய் வசந்த் வெற்றி
அதன்படி கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வசந்த் & கோ உரிமையாளர் வசந்தகுமார் வென்றார். அவர் மறைந்த பிறகு 2021ல் நடந்த தேர்தலில் மகன் விஜய் வசந்த் வென்றார். இந்த தேர்தலில் 2வது முறையாக காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பசிலியான், நாம் தமிழர் சார்பில் மரிய ஜெனிபர் போட்டியிட்டனர்.
கடந்த ஏப்ரல் 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த ஓட்டுகள் நேற்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 79 ஆயிரத்து 907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தமாக விஜய் வசந்த் 5,46,248 ஓட்டுகள் பெற்றார். பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 3,66,341 ஓட்டுகள் பெற்று 2ம் பெற்று தோற்றார். இந்த தொகுதியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 3ம் இடம் பிடித்தார். அவர் 52,721 ஓட்டுகள் பெற்ற நிலையில் 4வது இடத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் பசிலியான் 41,393 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.
நயினாரை வீழ்த்திய ராபர்ட் புரூஸ்.. திருநெல்வேலி புது எம்பியின் ‛பயோ’ இதுதான்! ராகுலே பாராட்டிட்டாரே
இதன்மூலம் கன்னியாகுமரி தொகுதியின் எம்பியாக மீண்டும் விஜய் வசந்த்தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதோடு பொன் ராதாகிருஷ்ணனை 2வது முறையாக அவர் வீழ்த்தி எம்பியாகி உள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் காங்கிரஸ் எம்பியாகி உள்ள விஜய் வசந்தின் பயோடேட்டா விபரம் வருமாறு:
கன்னியாகுமரி எம்பியாக தேர்வாகி உள்ள விஜய் வசந்த் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை வசந்த குமார். வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளரான வசந்த குமார் காங்கிரஸ் கட்சியில் எம்பி, எம்எல்ஏவாக செயல்பட்டார். 2006, 2014ல் வசந்தகுமார் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவானார். அதன்பிறகு 2019ல் கன்னியாகுமரி எம்பியாக வென்றார். மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி அவர் வென்றார். ஆனால் அவர் 5 ஆண்டு எம்பி பதவியை நிறைவு செய்யவில்லை.
துரதிர்ஷ்டவசமாக கொரோனா சமயத்தில் திடீரென்று உடல்நலக்குறைவால் மறைந்தார். வசந்த குமார் மறைவுக்கு பிறகு 2021ல் நடந்த கன்னியாகுமரி இடைத்தேர்தலில் விஜய் வசந்த் முதல் முறையாக போட்டியிட்டு பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார். அதன்பிறகு தற்போது அவர் 2வது முறையாக பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி உள்ளார்.
தொடக்கத்தில் விஜய் வசந்த் சினிமாவில் நடித்தார். சென்னை 600028 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பிறக எம்பியான பிறகு திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டார். தற்போது வசந்த் & கோவின் நிர்வாக இயக்குநராகவும், கன்னியாகுமரி எம்பியாகவும் வலம் வருகிறார். விஜய் வசந்தின் தாய் பெயர் ஜெப்ரீன். மனைவி பெயர் நித்யா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications