Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நயினாரை வீழ்த்திய ராபர்ட் புரூஸ்.. திருநெல்வேலி புது எம்பியின் ‛பயோ’ இதுதான்! ராகுலே பாராட்டிட்டாரே

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய ட்விஸ்ட்டாக திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த ராபர்ட் புரூஸ் யார்? பின்னணி என்ன? அவர் எப்படி திருநெல்வேியில் வென்றார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

திருநெல்வேலி தொகுதியில் சிட்டிங் எம்பியாக எஸ் ஞானதிரவியம் இருந்தார். பல பிரச்சனைகளில் அவர் சிக்கியதால் இந்த முறை திருநெல்வேலி தொகுதியை திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிட்டார்.

lok sabhlok sabha a election 2024 tirunelveli robert bruce congress nellai 2024 politics

பாஜக சார்பில் திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் சார்பில் சத்யா ஆகியோர் களமிறங்கினர். இதில் நயினார் நாகேந்திரன் தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் தான் ஏப்ரல் 19ல் நடந்த பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. தொடக்கத்தில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தாலும் அதன்பிறகு காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகிக்க தொடங்கினார். அதன்பிறகு நயினார் நாகேந்திரனால் அவரை முந்த முடியவில்லை. இறுதியாக ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 ஓட்டுகளை பெற்ற நிலையில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,36,676 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 89,601 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் சத்யா 87,686 ஓட்டுகள் பெற்று 4ம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் தான் திருநெல்வேலி எம்பியாக தேர்வாகி உள்ள ராபர்ட் புரூஸ் யார்? அவரது பின்னணி என்ன? நயினார் நாகேந்திரனை அவர் வென்றது எப்படி? என்பது பற்றி விபரம் வருமாறு:

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் தோல்வி.. 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காங்கிரஸ்


திருநெல்வேலி எம்பியாக தேர்வாகி உள்ள ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டம் காட்டத்துறையை சேர்ந்தவர். அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு வயது 62 ஆகிறது. நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். கிறிஸ்தவ (சிஎஸ்ஐ) மதத்தை சேர்ந்தவர். திருநெல்வேலியில் லோக்சபா தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக நாடார் சமுதாய மக்கள் உள்ளனர். அதேபோல் திருநெல்வேலி பாளையங்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ளனர். ராபர்ட் புரூஸ் கிறிஸ்தவர் என்பதால் எளிதாக ஓட்டுகள் கிடைக்கும் என காங்கிரஸ் காய் நகர்த்தியது. இதனால் தான் கன்னியாகுமரியை சேர்ந்தவராக இருந்தாலும் கூட திருநெல்வேலியில் களமிறக்கப்பட்டார்.

மேலும் ராபர்ட் புரூஸ் நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். மாணவர் அணி, இளைஞர் அணி முதல் அவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வருகிறார். 2015ஆம் ஆண்டு முதல் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் கேரளா காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். குறிப்பாக மறைந்த கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியுடன் நெருக்கம் காட்டினார்.

அதோடு கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது வயநாட்டில் தங்கி ராபர்ட் புரூஸ், ராகுல் காந்தியின் வெற்றிக்கு பணி செய்து அவரிடம் பாராட்டும் பெற்றவர். ராபர்ட் புரூஸ் களநிலவரத்தை அறிந்து கட்சி நிர்வாகிகளை அனுசரித்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரர். இதனால் தான் திருநெல்வேலி தொகுதியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பல கோஷ்டிகளாக பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவர்களை அனுசரித்து சென்று ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றுள்ளார். இல்லாவிட்டால் பாஜகவில் பெயர் பெற்ற நயினார் நாகேந்திரன் போன்ற ஒருவரை நிச்சயம் திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியால் வீழ்த்தி இருக்க முடியாது என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

கனிமொழியின் ஸ்கெட்ச்.. தென்காசியில் கிருஷ்ணசாமி - ஜான் பாண்டியனை வீழ்த்திய ராணி ஸ்ரீகுமாரின் ‛பயோ’


முன்னதாக தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியும் வழங்கப்பட்டது. இதில் 9 தொகுதிக்கு வேட்பாளர்கள் பெரும் இழுபறிக்கு பிறகு அறிவிக்கப்பட்டனர். ஆனாலும் திருநெல்வேலிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவே இல்லை. வேட்புமனுவுக்கு கடைசி நாளில் நெருங்கிய நிலையிலும், முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலி நாங்குநேரியில் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையிலும் தான் ராபர்ட் புரூஸின் பெயர் கடைசியாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கூட ராபர்ட் புரூஸ் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வீழ்த்தி வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+