திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் தோல்வி.. 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காங்கிரஸ்
திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் தோல்வியடைந்தார். அவரை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1.62 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இங்கு அதிமுக வேட்பாளர் 3ம் இடம் பிடித்த நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
திருநெல்வேலி தொகுதியில் தற்போது சிட்டிங் எம்பியாக எஸ் ஞானதிரவியம் உள்ளார். இவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் திருநெல்வேலி தொகுதியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது.

தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிட்டுள்ளார். அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, நாம் தமிழர் சார்பில் சத்யா ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஆலங்குளம் (ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ), அம்பாசமுத்திரத்தில் (அதிமுக இசக்கி சுப்பையா) வசம் உள்ளது. பாளையங்கோட்டை (திமுக அப்துல் வஹாப்), ராதாபுரம் (சபாநாயகர் அப்பாவு - திமுக) ஆகியவை திமுக வசம் உள்ளது. நாங்குநேரியில் (காங்கிரஸ் ரூபி மனோகரன்) மட்டும் காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளார். நெல்லை தொகுதி எம்எல்ஏவாக நயினார் நாகேந்திரன் உள்ள நிலையில் அவர் தேர்தலில் பேட்டியிட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரியை சேர்ந்தவர். அதேபோல் காங்கிரஸ், திமுகவில் திருநெல்வேலியில் கோஷ்டிபூசல் உள்ளது. இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். அதிமுக பல அணிகளாக பிரிந்தது ஜான்சி ராணிக்கு மைனஸாக அமைகிறது. நாம் தமிழர் கட்சிக்கு கடந்த முறையை விட இந்த முறை ஓட்டு அதிகம் கிடைத்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம்.
ஆனால் நயினார் நாகேந்திரன் உள்ளூர்காரர். திருநெல்வேலி எம்எல்ஏவாக இருப்பது, அனைத்து தரப்பு மக்களிடம் சாதாரணமாக பழகும் தன்மை, நயினார் நாகேந்திரனின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் பாஜகவின் சமீபத்திய வளர்ச்சி உள்ளிட்டவை நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாக மாறலாம். இதனால் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக திருநெல்வேலி லோக்சபா தேர்தலில் தாமரை மலரும்.
இந்நிலையில் தான் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்தது. இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றார். அதன்பிறகு திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை பெற தொடங்கினார்.
முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 17,802 ஓட்டுகளை பெற்று முன்னிலை வகித்தார். பாஜகவின் நயினார் நாகேந்திரன் 13,484 ஓட்டுகள் பெற்று 2-வது இடத்தில் இருந்தார். அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி 2,947 ஓட்டுகள் பெற்று 3வது இடத்திலும், சீமானின் நாம் தழிழர் வேட்பாளர் சத்யாவுக்கு 1,843 ஓட்டுகளுடன் 4வது இடத்திலும் இருந்தார்.
அதன்பிறகு மதியம் 12.30 மணியளவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1 லட்சத்து 58ஆயிரத்து 606 ஓட்டுகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து களமிறங்கி உள்ள பாஜகவின் நயினார் நாகேந்திரன் 1 லட்சத்து 15 ஆயிரத்து 130 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்தார் இங்கு நாம் தமிழர் கட்சியின் சத்யா 31 ஆயிரத்து 320 ஓட்டுகளுடன் 3வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 28,619 ஓட்டுகளுடன் 4வது இடத்திலும் இருந்தார்.
மதியம் 2 மணியளவில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 2 லட்சத்து 50 ஆயிரத்து 931 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1 லட்சத்து 74 ஆயிரத்து 17 ஓட்டுகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதற்கு அடுத்தப்படியாக நாம் தமிழர் வேட்பாளர் சத்யா 48 ஆயிரத்து 457 ஓட்டுகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். அதிமுகவின் ஜான்சிராணி 45,113 ஓட்டுகள் பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மாலை 6 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 4 லட்சத்து 83 ஆயிரத்து 222 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்தார். அடுத்ததாக பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 20ஆயிரத்து 640 ஓட்டுகள் பெற்று 2வது இடத்தில் இருந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் என்பது 1 லட்சத்து 62 ஆயிரத்து 582 ஆகும். இதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 86,574 ஓட்டுகள் பெற்று 3வது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சத்யா 84,156 ஓட்டுகள் பெற்று 4வது இடத்திலும் இருந்தார்.
கடைசியாக ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 1,65,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 5,02,296 ஓட்டுகளை பெற்ற நிலையில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,36,676 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 89,601 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் சத்யா 87,686 ஓட்டுகள் பெற்று 4ம் இடத்தை பிடித்தார்.
திருநெல்வேலி லோக்சபா தொகுதி மொத்தம் 17 முறை தேர்தலை சந்தித்துள்ளது. இதில் திமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதாவது அதிமுக 7 முறை வாகை சூடியுள்ளது.காங்கிரஸ் 5 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுதந்திர கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் கடந்த 2004 முதல் 2019 வரையிலான லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அவர்கள் பெற்ற வாக்குகளின் விபரம் வருமாறு:
2004ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரஸ்) - 3,70,127
அம்ரிதா கணேசன் (அதிமுக) - 2,03,052
எம் அப்பாவு (ஜேடியூ) - 39,333
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
எஸ். இராமசுப்பு(காங்கிரஸ்) - 2,74,932 (வெற்றி)
அண்ணாமலை(அதிமுக) - 2,53,629
மைக்கேல் இராயப்பன்(தேமுதிக) - 94,562
கரு. நாகராஜன்(பாஜக) - 39,997
2014ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கேஆர்பி பிரபாகரன்(அதிமுக) - 3,98,139
சி தேவதாச சுந்தரம்(திமுக) - 2,72,040
சிவணைந்த பெருமாள்(தேமுதிக) - 1,27,370
ராமசுப்பு(காங்கிரஸ்) - 62,863
2019ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
எஸ் ஞானதிரவியம் (திமுக) - 5,22,623
மனோஜ் பாண்டியன்(அதிமுக) - 3,37,166
மைக்கேல் இராயப்பன்(அமமுக) - 62,209
சத்யா(நாம் தமிழர்) - 49,898
வெண்ணிமலை (மநீம) - 23,100
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications