Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனிமொழியின் ஸ்கெட்ச்.. தென்காசியில் கிருஷ்ணசாமி - ஜான் பாண்டியனை வீழ்த்திய ராணி ஸ்ரீகுமாரின் ‛பயோ’

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன் ஆகிய இருபெரும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய தலைவர்களை வீழ்த்தி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வென்றார். இந்நிலையில் தான் ராணி ஸ்ரீகுமார் யார்? அவரது பின்னணி என்ன? அவருக்கும் கனிமொழிக்கும் இடையேயான பந்தம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். 40க்கு 40 வெல்வோம் என்ற முழக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்தார். தற்போது தேர்தல் முடிவில் 40க்கு 40 என அனைத்து தொகுதிகளும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வசம் சென்றுள்ளது.

DMK Tenkasi Lok Sabha Election 2024 2024

தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மீண்டும் தோற்றுப்போய் உள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கும் ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. இந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பல நட்சத்திர தொகுதிகள் இருந்தன. குறிப்பாக பல பிரபலங்கள் களமிறங்கி இருந்தனர்.

அந்த வகையில் தமிழகத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்ட ஒரு தொகுதி தான் தென்காசி. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அதேபோல் பாஜக சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் களமிறங்கினார். இவர்கள் 2 பேரும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் பெரும் தலைவர்கள். அதோடு அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்கள்.

இதனால் தென்காசி தொகுதி அதிக கவனம் பெற்றது. இதற்கிடையே திமுக சார்பில் தென்காசி வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் களமிறக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் இசைமதிவாணன் போட்டியிட்டார். நான்கு முனை போட்டி தொகுதியில் நிலவியது. இதில் தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் 1,96,199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மொத்தமாக 4,25, 679 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி 2,29,480 வாக்குகள் மட்டுமே பெற்று ராணி ஸ்ரீகுமாரிடம் தோற்றார். இது தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி சந்திக்கும் 7 வது தோல்வியாகும்.
மேலும் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 2,08,825 ஓட்டுகளை பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் வேட்பாளரான இசை மதிவாணன் 1,30,335 ஓட்டுகள் பெற்று 4ம் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தான் தென்காசி எம்பியாக தேர்வாகி உள்ள ராணி ஸ்ரீகுமாரின் பின்னணி பற்றிய விபரம் வருமாறு: எம்பியாக தேர்வாகி உள்ள ராணி ஸ்ரீகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் சிவக்குமார். இவர் எழுத்தராக இருந்து ஓய்வு பெற்றவர். தாய் பெயர் செல்வமணி. இவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராணி ஸ்ரீகுமார் அடிப்படையில் டாக்டர். மயக்கவியல் நிபுணரான இவர் அரசு மருத்துவராக பணியாற்றினார்.

இவரது கணவர் பெயர் ஸ்ரீகுமார். இவர் அரசு ஒப்பந்ததாரர். அதோடு திமுகவில் விவசாய அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.
ராணி ஸ்ரீகுமார் 2002 முதல் திமுகவில் செயல்பட்டு வருகிறார். தென்காசி சிட்டிங் எம்பி தனுஷ் குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் திடீரென்று தான் ராணி ஸ்ரீகுமாரின் பெயரை திமுக டிக் செய்தது.

இதன் பின்னணியில் கனிமொழி எம்பி உள்ளார். அதாவது தென்காசி தொகுதியில் பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் கனிமொழி உறுதியாக இருந்துள்ளார். இதில் முன்னாள் எம்எல்ஏ முத்து செல்வியின் பெயர் முன்னிலை வகித்தது. ஆனால் அவர் அதிமுகவில் இருந்து திமுகவில் வந்தவர் என்பதால் அவர் நிராகரிக்கப்பட்டார்.

அதன்பிறகு தான் ராணி ஸ்ரீகுமார் பெயர் ஓகே செய்யப்பட்டுள்ளது. அடிப்படையில் டாக்டர், பாரம்பரிய திமுக குடும்பம் (ராணி ஸ்ரீகுமாரின் பெரியப்பா துரைாஜ் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏவானவர். அதில் 1967ல் திமுக எம்எல்ஏவாக இருந்தார்), எம்பி தேர்தலை எதிர்கொள்வதற்கான பணபலம், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் பெரும் தலைவர்களாக அறியப்படும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோரை எதிர்க்கும் திறன் இருப்பதாக நினைத்து கனிமொழி தான் ராணி ஸ்ரீகுமாரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்து வாய்ப்பு வழங்கிய நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+