• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாத்ரூமுக்குள் நுழைந்த பிஞ்சு.. கையில் கூல்டிரிங்ஸ்ஸுடன்.. வெந்துபோன உறுப்பு.. பதறிய குமரி.. கொடுமை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: 6ம் வகுப்பு மாணவனை கொல்வதற்காக முயற்சி நடந்துள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. அதுவும் இந்த பிஞ்சுவை இவ்வளவு கொடூரமாக ஏன் கொல்ல நினைக்க வேண்டும்?
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 11 வயதுதான் ஆகிறது.. அதங்கோடு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 24ம்தேதி, இந்த பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து, லீவும் விடப்பட்டுள்ளது.. தேர்வின் கடைசி நாள் அது.. மாணவனும் பள்ளி முடிந்ததும், அங்குள்ள பாத்ரூமுக்கு சென்றுள்ளான்.

1972.. ஆசை ஆசையாக பிளான் போட்ட எடப்பாடி! எனக்குத்தான் தடை இல்லையே! சசிகலா எடுத்த 1972.. ஆசை ஆசையாக பிளான் போட்ட எடப்பாடி! எனக்குத்தான் தடை இல்லையே! சசிகலா எடுத்த

பாத்ரூம்

பாத்ரூம்

அப்போது அதே பள்ளியை சேர்ந்த இன்னொரு மாணவனும் பாத்ரூம் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான்.. கையில் கூல்ட்ரிங்ஸ் வைத்திருந்தவன், திடீரென இந்த 6ம் வகுப்பு சிறுவனுக்கு தந்துள்ளான்.. ஒரே யூனிபார்ம் அணிந்த, ஒரே ஸ்கூல் மாணவன் என்றாலும், அவனை முன்னேபின்னே இந்த மாணவன் பார்த்தது கிடையாதாம். அதனால், கூல்டிரிங்ஸ் வேண்டாம் என்று சொல்லி அதை வாங்க மறுத்துள்ளான்... ஆனால், அந்த சிறுவனோ விடாமல் வலுக்கட்டாயமாக, கூல்டிரிங்ஸ் குடித்தே ஆக வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளான்..

கூல்டிரிங்க்ஸ்

கூல்டிரிங்க்ஸ்

அதனால், அந்த கூல்டிரிங்ஸை குடித்துவிட்டு, சிறுவன் வீட்டுக்கும் வந்து விட்டான். பிறகு திடீரென காய்ச்சல் வந்துள்ளது.. அந்த பகுதியில் நிறைய பேருக்கு காய்ச்சல் பரவி வருவதால், தங்கள் மகனுக்கும் காய்ச்சல் வந்திருக்கலாம் என்று நினைத்து தனியார் மருத்துவமனைக்கு அவனது பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.. சிகிச்சையும் தந்துள்ளனர்.. ஆனால் காய்ச்சல் மட்டும் குணமாகவில்லை... அத்துடன், 2, 3 நாட்களில் காய்ச்சல் அதிகமாகி கொண்டே போயுள்ளது. வயிற்று வலி, வாந்தி என அடுத்த பாதிப்புகள் ஏற்பட்டன.. பிறகு, ஜீரண கோளாறு, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது..

வெந்த நாக்கு

வெந்த நாக்கு

அடுத்த கொஞ்ச நேரத்தில் நாக்கு பகுதி வெந்து காணப்பட்டது.. இதையெல்லாம் பார்த்து பதறிப்போன பெற்றோர், உடனடியாக நெய்யாற்றின்கரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனுக்கு உடனடியாக வயிற்று பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.. அப்போதுதான் டாக்டர்களே அதிர்ந்துபோனார்கள்.. வாயில் இருந்து குடல் வரை வெந்து போய் இருந்ததாம்.. ஆசிட் போன்று ஏதாவது திரவத்தை குடித்ததால் மட்டுமே இப்படியான பாதிப்புகள் வரும் என்கிறார்கள் டாக்டர்கள்.. அதுமட்டுமல்ல, இவ்வளவும் கண்டுபிடித்து முடிப்பதற்குள் அந்த சிறுவனின் சிறுநீரகமும் செயல் இழந்துவிட்டது..

இளம்சிறார்

இளம்சிறார்

அதற்கு பிறகுதான், ஸ்கூலில் ஒரு மாணவன் கட்டாயப்படுத்தி கூல்டிரிங்ஸ் குடிக்க வைத்ததை சொன்னான்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கும், களியக்காவிளை போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு உடனடியாக விசாரணை நடத்தினர்... இதற்கு நடுவில், சிறுவனின் அம்மா, அளித்த புகாரின் பேரில் இபிகோ 328 மற்றும் இளம்சிறார் பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
மர்மம் விலகாதா

மர்மம் விலகாதா

சிறுவனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் குளிர்பானத்தில் ஏதாவது கலந்து கொடுத்தார்களா? அல்லது வேறு ஏதாவது பிரச்னையா? யூனிபார்ம் அணிந்த அந்த மாணவன் யார்? வலுக்கட்டாயமாக கூல்டிரிங்ஸ் தர என்ன காரணம்? என்றெல்லாம் புரியாத மர்மமாகவே நீடித்து வருகிறது.. விசாரணையும் துரிதமாக நடந்தாலும், இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் குமரியில் கூட்டி வருகிறது.. கூல்டிரிங்ஸ் கொடுத்த அந்த மாணவனை கண்டுபிடித்த பிறகுதான், இது பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்கிறார்கள் போலீசார்..

சீரியஸ் கண்டிஷன்

சீரியஸ் கண்டிஷன்

ஆனால், பாதிக்கப்பட்ட சிறுவன் நிலைமை மோசமாக இருக்கிறதாம்.. ஸ்லோ பாய்சன் தன்மை கொண்ட அமிலத்தன்மையுடன் கூடிய திரவம் என்கிறார்கள் டாக்டர்கள்.. இதை தான் கூல்டிரிங்ஸில் கலந்து தந்தள்ளனர்.. இதுபோன்ற அமிலத்தை குடித்தால் உடனே பாதிப்பை ஏற்படுத்தாமல், மிகவும் மெதுவாகவே தன் வேலையை காட்ட தொடங்குமாம்.. அந்தவகையில்தான், சிறுவனுக்கு பாதிப்புகள் கூடியது என்கிறார்கள்..

English summary
Who needs to kill the student and what happened to the 6th std boy in Kanniyakumari
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X