உல்லாசமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் வந்த வீடியோ.. நாகர்கோவில் நபர் செய்த செயல்! சிக்கிய இளம்பெண்
நாகர்கோவில்: உல்லாசமாக இருக்கலாம் என்று பேஸ்புக்கில் வந்த வீடியோக்களை பார்த்து நாகர்கோவில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக அந்த ஊழியர் கொடுத்த புகாரின் பேரில், பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டு பணம் பறித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்ற பழமொழிக்கு இணங்க காலம் நவீனமடைந்தாலும் மோசடி சம்பவங்கள் குறைந்தபாடில்லை. காலத்து ஏற்ப அப்டேட் செய்து அதற்கு தகுந்தாற்போல் ஏமாற்றி மோசடி செய்து பணம் பறித்து வருவதையே வேலையாக வைத்துள்ளனர் சிலர்.

பேஸ்புக்கில் வந்த வீடியோ
இத்தகைய மோசடி சம்பவங்களில் யாரும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை செய்தாலும் இந்த சம்பவங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் தான் நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம் பேஸ்புக்கில் இளம்பெண்களில் ஆபாச புகைப்படங்கள், கிளுகிளுப்பான படங்களை பதிவிட்டு, உல்லாசமாக இருக்கலாம் என பதிவிட்டு பணத்தை பறித்துள்ளார் இளம்பெண் ஒருவர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் 40 வயது நபர் ஒருவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அவர் பெண் ஒருவரின் ஐடியை பார்த்துள்ளார். அந்த பதிவில் இருந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் பேசுவது போன்று இருந்தது. வீடியோவில், "இங்கே உள்ள பெண்களிடம் பேச வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு அதில் ஒரு செல்போன் எண் வரும்.
வீடியோ காலில் பேசலாம்
அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், ஆபாச உரையாடல் செய்யும் பெண்களும், ஆபாச சாட்டிங் செய்யும் பெண்களும் வீடியோ கால் மூலம் திரையில் தோன்றுவார்கள். விருப்பப்பட்டால், அவர்களிடம் உல்லாசமாகவும் இருக்கலாம் என அந்த பெண் வீடியோவில் பேசுவது போன்று இருந்தது. மேலும் இந்த வீடியோக்களுடன் சில கிளுகிளுப்பான வீடியோக்களும் இருந்துள்ளன.
இதையடுத்து அந்த ஊழியர் ரூ.1,500 வரை ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பியிருக்கிறார். அதில் குறிப்பிட்டது போலவே ஒரு செல்போன் எண்ணும் இருந்துள்ளது. ஆனால் அந்த எண்ணை தொடர்புகொண்ட போது சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அந்த ஊழியர் உணர்ந்துள்ளார்.
ராமநாதபுரம் இளம்பெண் கைது
இது குறித்து உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ராமநாதபுரத்தை சேர்ந்த நபிலா பேகம் என்ற 20 வயது இளம்பெண் தான் போலியாக பேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் ஆபாச படங்கள், வீடியோக்களை பதிவேற்றி அதில் சிக்கும் ஆண்களிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
நாகர்கோவிலில் வீடு எடுத்து தங்கியிருந்த நபிலா பேகமை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் தக்கலையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்று பணம் கறக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications