தபால் துறையின் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம்.. 2 நாளில் முடியப்போகும் சூப்பர் திட்டம்.. விவரம்
கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டத்தில் 13 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்று தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறினார். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்வடையும் என்றும் கூறினார்.
கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள மகளிர் மதிப்பு திட்டம் பெண்களுக்கான ஒரு சிறப்பான சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக சேர்ந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு திட்டம்
இந்த திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்ணின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையிலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர் மூலமும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம்.
7.5 சதவீதம் வட்டி
குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்வடையும். இந்த திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5 சதவீதம் வழங்கப்படும். கணக்கு தொடங்கிய நாளில் இருந்து ஓராண்டு நிறைவடையும் போது 40 சதவீதம் வரை மீதி தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும்.
கணக்கு முடித்தல்
கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது பாதுகாவலர்கள் மரணமடைந்தாலோ அல்லது தீவிர மருத்துவக் காரணங்களாக இருந்தாலும் இந்த கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்கு பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு முடித்துக்கொள்ளும் பட்சத்தில் வட்டிவிகிதம் 2 சதவீதம் குறைக்கப்படும்.
2 நாள் தான் இருக்கு
இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வருகிற 31-ந் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ளது. மேலும் வருகிற 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் நாளைக்குள் (29-ந்தேதி) இந்த வாய்ப்பை அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி பயன்பெறலாம். இதற்காக அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications