"என்னை அந்த அடி அடிச்சாங்களே..சாமி என்ன செஞ்சுச்சு.. அதான் நானே".. பதற வைத்த ரமேஷ்!
அம்மன் சாமி சிலையை இளைஞர் உடைத்துள்ளார்
கன்னியாகுமரி: "என்னை அப்படி போட்டு அடிச்சவங்களை, அந்த சாமி எதுவுமே செய்யல.. அப்பறம் எதுக்கு அங்கே சும்மா உட்கார்ந்துட்டு... அதான்" என்று லவ் தோல்வியில் ரமேஷ் செய்த காரியம் ஒன்று பதற வைத்துள்ளது!
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்தது.. அப்போது, கோயிலில் இருந்த சாமி சிலையும் சேதமானது.

கொள்ளை முயற்சியின்போது, கொள்ளையர்கள் இந்த சாமி சிலையை சேதப்படுத்தியிருக்கலாம் என்று கூறி தென்தாமரைகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தரப்பட்டது.. போலீசாரும் கொள்ளை அடிக்க வந்த அந்த மர்ம நபர் யார் என்று தேடி வந்தனர்.
இது சம்பந்தமான விசாரணையில், கோயில் அருகில் ஒரு செல்போன் இருந்தது.. அதை கைப்பற்றி யாருடைய செல்போன், எதற்காக கோயில் பக்கத்தில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைத்து ஆய்வு செய்தனர்.. அந்த போன் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையை சேர்ந்த ரமேஷ் என்பவருடையது என்று தெரியவந்தது. ரமேஷூக்கு வயது 24 ஆகிறது.
அவரை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.. அப்போது அவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து விட்டனர். "நான் இந்த ஏரியாவில் இருக்கிற ஒரு பெண்ணை லவ் பண்ணேன்.. விஷயம் அந்த பொண்ணு வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சு.. அதனால், அந்த பொண்ணோட சொந்தக்காரர்கள் கடந்த கோயில் கொடை விழாவின்போது என்னை தாக்கிவிட்டனர்... எனக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு.
அந்த ஆத்திரத்தில் அகஸ்தீஸ்வரத்திலுள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு போனேன்.. உள்ளே இருந்த அம்மன் சாமியிடம், என்னை அடிச்சவங்களுக்கு எல்லாம் தண்டனை தரணும்னு வேண்டிக்கிட்டேன்.. ஆனால் அந்த சாமி எதுவுமே தண்டனை தரல... இது எனக்கு இன்னும் கோபத்தை தந்தது.. அதான், "நீ இங்கு இருந்து என்ன பிரயோஜனம்" என்று கூறி கோயில் கருவறை பக்கத்தில் இருந்த ஜன்னலை திறந்து சாமி சிலையை கம்பால் அடிச்சேன்.
அப்பதான் அந்த சிலை சேதமாயிடுச்சு.. சிலையை நான் அடிக்கும் சத்தம் கேட்டு அங்க ஆட்கள் வருவது போல இருக்கவும் நான் தப்பித்து ஓடிவிட்டேன்" என்றார். இதையடுத்து ரமேஷை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்... காதல் தோல்வி + சாமி எதுவும் தண்டனை தராதது என விரக்தியில் அம்மன் சிலையை ரமேஷ் கம்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications