கன்னியாகுமரியில் கொடூரம்.. மனைவியுடன் ஒரே அறையில் கள்ளக்காதலன்! சமீருக்கு வந்ததே ஆத்திரம்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தன் மனைவியுடன் தூங்கிய அவரது கள்ளக்காதலனை கணவன் கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் கள்ளக்காதலனை கணவர் அடித்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை தன் கணவருடன் சேர்ந்து அப்புறப்படுத்த மனைவி உதவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் நடந்த இந்த சம்பவம் குறித்து முழுமையாக பார்ப்போம். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் சமீர் (34). மீன் பிடித் தொழிலாளி. இவருடைய மனைவி ஆல்பர்ட் (26).
எப்படி பழக்கம்: இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெனிபா, தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கண்ணனாகம் பகுதிக்கு சென்ற போது அங்குள்ள ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்த ஆஷிக்கிற்கும் ஜெனிபாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
முதலில் சாதாரணமாக பேசிய நிலையில் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவன் மீன் பிடித் தொழிலுக்கு செல்லும் நேரத்தில் ஆஷிக்கும் ஜெனிபாவும் தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்தனர். இது எப்படியோ கணவர் சமீருக்கு தெரியவந்தது. இது குறித்து கேட்ட போது ஜெனிபாவுக்கும் சமீருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சண்டை: இந்த தகராறு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், ஜெனிபா, தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் மாங்குழியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆஷிற்கு ரொம்ப வசதியாகிவிட்டது. அங்கும் இரவு நேரத்தில் தனிமையில் போய் தங்களது கள்ளகாதலை வளர்த்துள்ளனர்.
போதையில் சமீர்: இந்த நிலையில் நேற்று முன் தினம் போதையில் இருந்த சமீருக்கு, தனது குழந்தைகளை பார்க்க வேண்டும் என தோன்றியது. இதனால் அவர் மாங்குழியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அங்கு ஒரு அறையில் ஆஷிக் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடன் ஜெனிபாவும் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்த சமீருக்கு ஆத்திரம் வந்தது. கோபத்தில் என்ன செய்வது என தெரியாமல் அங்கு கிடந்த கட்டையை எடுத்து ஆஷிக் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆஷிக் மயங்கியுள்ளார். இதனால் சமீர் அதிர்ச்சி அடைந்தார். தனது கள்ளக்காதலன் சரிந்து விழுந்து கிடப்பதை பார்த்து ஜெனிபாவும் அதிர்ச்சி அடைந்தார்.
கணவருடன் சேர்ந்து மனைவி: உடனே கள்ளக்காதலன் எப்படியும் இறந்துவிடுவார், இனி கணவனே கண் கண்ட தெய்வம் என கருதிய ஜெனிபா, கணவருடன் சேர்ந்து ஆஷிக்கை இருசக்கர வாகனத்தில் வைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் படுகாயமடைந்த ஆஷிக்கின் முனகல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி ஆஷிக் உயிரிழந்துவிட்டார். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில்தான் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆஷிக் கொல்லப்பட்டதும் இதில் சமீருக்கு ஜெனிபா உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலைகள்: கள்ளக்காதலால் நாள்தோறும் கொலைகள், தாக்குதல்கள், தற்கொலைகள் என அதிகரித்து வருகின்றன. இதனால் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்துவிடுகிறார்கள். மற்றொருவர் சிறை செல்கிறார். இதனால் அவருடைய குழந்தைகள் ஆதரவற்றவராகி விடுகிறார்கள்.
குடும்பத்தினர் நிலை: இதே நிலைதான் கள்ளக்காதலன் குடும்பத்திற்கு! அவர் கொல்லப்பட்டாலோ இல்லை சதி திட்டம் தீட்டி வேறு பெண்ணின் கணவரை கொன்றிருந்தாலோ அவருடைய குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதே போல் இந்த சம்பவத்தில் சமீர்- ஜெனிபா தம்பதியின் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications