Free Fire கேமை தடை செய்யுங்க.. கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை
கரூர்: Free fire ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ஸில் பதிவிட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
கரூர் மாநகராட்சி உட்பட்ட சுங்ககேட் பகுதியை அடுத்து உள்ளது சிவசக்தி நகர். இந்தப் பகுதியில் கணவரை பிரிந்துச் சென்று விட்ட நிலையில் தனது சஞ்சய் என்கின்ற 23 வயது மகனுடன் சத்தியபாமா என்பவர் வசித்து வந்துள்ளார்.
சஞ்சய் 12-ம் வகுப்பு முடித்து விட்டு, முதலில் ஒரு தனியார் கல்லூரியில் கேட்டரிங் படித்துள்ளார். அந்தக் கல்லூரியில் படிப்பை தொடர முடியாமல் வெளியேறி மற்றொரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார்.

கல்விக் கட்டணம்
கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் கடந்த ஒரு ஆண்டு காலமாக கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். சக நண்பர்கள் சொல்லும் சாப்பாடு பரிமாறுவது, குல்ட் தயாரிப்புக்கு வேலைக்கு போவது என சிறு சிறு தினக் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

ப்ரீ பயர்
12ம் வகுப்பு படிக்கும் போதே free fire விளையாட்டில் ஆர்வம் கொண்ட சஞ்சய், பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்த பிறகு அந்த ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதை அடுத்து இளைஞர் தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இரவு பகல்
இரவு பகலாக விளையாடி நிறைய பணம் சேர்த்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கிடைக்கிற வேலைகளை உடன் வரும் சக நண்பர்களுடன் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது உடன் இருந்த ஒரு நண்பன் பேசுவதற்காக செல்போனை வாங்கி அவரிடமிருந்த ஆன்லைன் கேம் user I'd, password திருடி தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு செல்போன் தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

சஞ்சய்
மேலும், சஞ்சயிடம் இருந்து திருடப்பட்ட user name, password கொண்டு விளையாடுவதை பார்த்து சக நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளார். இது நடந்து 6 மாத காலம் ஆன நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு user I'd, password விளையாடி வந்துள்ளதை மற்றொரு நண்பன் செல்போனில் பேசி விட்டு தருவதாக கூறி வாங்கி திருடிக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

தூக்கிட்டு தற்கொலை
தற்போதைய அந்த user I'd, password மூலம் விளையாடிய அந்த நண்பர் தோற்றதால் சஞ்சயின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் மதிப்பு பணம் எடுக்கப்பட்டதால் சஞ்சய் மன உளைச்சலில் இருந்துள்ளார். சஞ்சய் , ப்ரீ பயர் கேமுக்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க, என்ன மாதிரி ஏமாறாதீங்க, ஏதாவது சாதிங்க என வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் வைத்துள்ளார். கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்ன பண்ண பாய் பிரண்ட்ஸ் என்றும் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். இந்த நிலையில் தனது அம்மா வேலை சென்ற நேரத்தில் அம்மாவின் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications