7 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கரூர்: வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை பெற்ற முதியவரின் பெயர் சுந்தரம், 60. இவர் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கைத்தறி நெசவு தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஜூன் 2ஆம்தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்தார் என்பது இவர் மீதான புகார்.

சிறுமி அழுதுகொண்டே சென்று பெற்றோரிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சுந்தரத்தைக் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சுந்தரத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் 3 மாத சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் கூறி தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications