"இவர்"தான் முதல்வராக வேண்டும்.. இதற்காக ரஜினி கோபப்பட்டாலும் பரவாயில்லை.. அர்ஜூன் சம்பத்
கரூர்: ரஜினிகாந்த்தான் முதல்வராக வர வேண்டும். இதை சொல்வதனால் அவர் என்னிடம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கட்சி தொடங்குவதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருப்தி
அப்போது அந்த கூட்டத்தில் கட்சி தொடங்குவது குறித்து ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இன்று நான் நடத்திய ஆலோசனையில் மாவட்டச் செயலாளர்கள் திருப்தி அடைந்துள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்
ஆனால் நான் தனிப்பட்ட முறையில் ஏமாற்றமடைந்தேன். அது என்னவென பிறகு சொல்கிறேன் என் ரஜினிகாந்த் புதிர் போட்டு பேசினார். இதையடுத்து அவரவர் ரசனைக்கு ஏற்ப ரஜினி கூற வருவது என்ன என்பது குறித்து ஏராளமானோர் எடுத்துரைத்தனர். நாம் கட்சி ஆரம்பித்தால் அதில் நான் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என ரஜினி கூறியதை மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

ஏமாற்றம்
இந்த நிலையில் கரூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் அண்மையில் நடந்த ரஜினி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இளைஞர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிப்பது. பிரதிபலன் பாராமல் நிர்வாகிகள் உழைப்பது உள்ளிட்ட முடிவுகளை எடுத்ததாக சொல்கிறார். ஒரு விஷயம் மட்டும் ஏமாற்றமளிப்பதாக ரஜினி கூறியுள்ளார்.

கருத்து
கட்சி பொறுப்பில் இருந்து கொண்டு முதல்வர் பதவியை வேறொவருக்கு வழங்கும் கருத்தை அவர் முன் வைத்ததாகவும் அந்த யோசனையை நிர்வாதிகள் மறுத்ததாகவும் சொல்கிறார்கள். ரஜினி எப்போதும் பதவி நாற்காலிக்கு ஆசைப்பட்டவர் இல்லை. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் சிந்திப்பார். ரஜினிதான் அடுத்த முதல்வராக வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தக் கருத்தை சொல்வதனால் அவர் வருத்தப்பட்டாலும் பரவாயில்லை என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications