கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எனக்கு கட்சி நடத்தவே நேரமில்லீங்கண்ணா.. எம்பி எம்எல்ஏ பதவி மேல ஆசையும் இல்லீங்கண்ணா! பளீர் அண்ணாமலை!

Google Oneindia Tamil News

கரூர் : தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு தமிழக முதல்வர் இதுவரை எந்தவித கண்டன அறிக்கை தெரிவிக்காமல் பதிலுக்கு பாஜக மீது பழியை சுமத்துகிறார் என்றும், தற்போதைய திமுக ஆட்சி தமிழகத்தின் சாபக்கேடு என்று கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

கரூரில் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற 100 காச நோயாளிகளுக்கு ஒரு வருடத்திற்கான ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

4.30க்கு இறங்கி.. 10.30க்கு ரிமாண்ட்.. 'மலப்புரத்தில் நடந்தது இங்கேயும் நடக்கும்’ - அண்ணாமலை பரபர!4.30க்கு இறங்கி.. 10.30க்கு ரிமாண்ட்.. 'மலப்புரத்தில் நடந்தது இங்கேயும் நடக்கும்’ - அண்ணாமலை பரபர!

அண்ணாமலை

அண்ணாமலை

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை," கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்த பிறகு, திடீரென அந்த அனுமதியை ரத்து செய்த கரூர் மாவட்ட ஆட்சியரின் செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

தேவையில்லாமல் அரசியல்

தேவையில்லாமல் அரசியல்

இந்த விஷயத்தில் தேவையில்லாமல் அரசியல் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. அரசியல் என்பது ஒரு சேவை மட்டும்தான் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசவிரோத வழக்கு பதிந்து, குண்டர் சட்டத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் கரூரில் பாஜக நிர்வாகிகள் வீடுகளிலும், கிராமப்புறங்களிலும் பாதுகாப்பு வழங்கிய போலீசார் செயல் தேவையில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. அவர்களால் மற்ற வேலைகளை பார்க்க முடியவில்லை.

திமுக மத வாத கட்சியா?

திமுக மத வாத கட்சியா?

திமுக மத வாத கட்சியா? பாஜக மதவாத கட்சியா? என்று முதல்வர் தான் சொல்ல வேண்டும். ஒரு மத நிகழ்வுக்கு வாழ்த்து கூறுகிறார். மற்றொரு மத நிகழ்விற்கு வாழ்த்து கூற மறுக்கிறார். தமிழகத்தில் தற்போது நிலை வரும் திமுக ஆட்சி ஒரு சாபக்கேடு. திமுக எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளனர் என்ற கருத்து குறித்து கேள்வி கேட்டதற்கு, அனைத்து கமிஷனும் கோபாலபுரம் செல்வதால் தற்போது உள்ள எம்எல்ஏக்கள் விரக்தியில் உள்ளனர். ஆகையால் தான் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் நேரடியாக சென்று பொதுமக்களை மிரட்டி கமிஷன் கேட்கும் அளவிற்கு செல்கின்றனர். இன்னும் சிறிது காலத்தில் சாலையை மறித்து தடுத்து பறிக்கக்கூடிய நிலை கூட தமிழகத்தில் ஏற்படலாம்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்திய கலாசாரத்தை உலகம் முழுவதும் எடுத்து செல்லும் இயக்கம். 100 ஆண்டுகளை கடந்த இயக்கம். ஆர்எஸ்எஸ் இயக்கம் செய்த வேலைகளைப் பற்றி பார்ப்பதற்கு வட மாநிலங்களுக்கு ரயில்வே டிக்கெட் எடுத்து திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள் அனுப்பி வைக்கிறேன். அங்கு சென்று ஆர்எஸ்எஸ் செய்த வேலைகள் குறித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இஸ்லாமிய நண்பர்கள் உள்ளன..

 கட்சியை நடத்த நேரம் இல்லை

கட்சியை நடத்த நேரம் இல்லை

எனக்கு கட்சியை நடத்தவே நேரம் இல்லை. எம்.பி, எம்எல்ஏ பதவிகள் மீது எனக்கு ஆசை இல்லை. தமிழகத்தில் நடந்த பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித கண்டன அறிக்கையை முதல்வர் தெரிவிக்கவில்லை. ஆனால், பதிலுக்கு எங்கள் மீது பழியை சுமத்துகிறார். முதல்வர் அவ்வப்போது கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறார். நாங்கள் அவரை தட்டி எழுப்புகிறோம்" என்று தெரிவித்தார்.

English summary
BJP State President Annamalai in Karur has accused the Tamil Nadu Chief Minister of Karur for the incidents of petrol blasts in Tamil Nadu and blaming the BJP for the incidents of petrol blasts in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X