கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாலையில் நின்ற இமாம் சாஹிப் குடும்பம்! வேனை நிறுத்திய முதல்வர் ஸ்டாலின்! குளித்தலையில் நெகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

கரூர்: திருச்சியிலிருந்து கரூருக்கு செல்லும் வழியில் கருணாநிதியின் நண்பர் குடும்பத்தினர் சாலையில் தன்னை வரவேற்க நிற்பதை கண்டு வேனை நிறுத்தி நலம் விசாரித்துவிட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

1957-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட போது அவருடன் இணைந்து தீவிர களப்பணியாற்றியவர் இமாம் சாஹிப்.

அடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்கஅடேயப்பா.. அடுத்த 3 நாட்களுக்கு செம மழைதான்.. வெளியான அசத்தல் அறிவிப்பு.. எங்கனேன்னு பாருங்க

தமிழகத்தில் காங்கிரஸ் கொடி உயரப் பறந்த காலகட்டத்தில் கருணாநிதி பிற்காலத்தில் அரசியலில் உச்சம் தொடுவார் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இமாம் சாஹிப் தேர்தல் பணியில் சுற்றிச்சுழன்றவர்.

கரூர் பயணம்

கரூர் பயணம்

கரூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை திருச்சி வந்தார். அங்கு அவரை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப், அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தனக்காக சென்னையிலிருந்து முன் கூட்டியே திருச்சி விமான நிலையத்திற்கு வந்து காத்திருந்த பென்ஸ் வேனில் ஏறிய ஸ்டாலின், சாலை மார்க்கமாக திருச்சியிலிருந்து கரூர் புறப்பட்டுச் சென்றார்.

குளித்தலை

குளித்தலை

முதலமைச்சருடன் அமைச்சர்கள் நேரு, செந்தில்பாலாஜி அவரது உதவியாளர் தினேஷ் ஆகிய மூன்று பேர் மட்டும் அந்த வேனில் பயணித்தனர். அப்போது கரூர் மாவட்ட எல்லையான குளித்தலை அருகே முதல்வரின் வேன் வந்தபோது, கரூர் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டன. அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், குளித்தலை தொகுதி தொடர்பான பழைய கதைகளை அசைபோட்டபடி பயணித்திருக்கிறார்.

இமாம்சாஹிப் குடும்பத்தினர்

இமாம்சாஹிப் குடும்பத்தினர்


இந்நிலையில் குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை அருகே முதல்வரின் வேன் சென்று கொண்டிருந்த போது அங்கு ஒரு சிறிய குழு நின்று கொண்டிருந்தது. இதை கவனித்துவிட்ட ஸ்டாலின் வேனை நிறுத்தச் சொல்லி அவர்களிடம் பேசினார். அப்போது கருணாநிதியின் நண்பரான குளித்தலை இமாம் சாஹிப் மருமகள் நான் என ஒரு பெண் கூறினார். இமாம் சாஹிப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த முதலமைச்சருக்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது.

நினைவுப்பரிசு

நினைவுப்பரிசு

இமாம்சாஹிப் குடும்பத்தினர் கொடுத்த நினைவுப்பரிசை பெற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களை நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டார். முதல்வரை பொறுத்தவரை வெளியூர் சுற்றுப்பயணங்களின் போது இது போன்ற ஆரம்பகால கட்சியின் முன்னோடிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

English summary
CM Stalin met Karunanidhi's friend family:திருச்சியிலிருந்து கரூருக்கு செல்லும் வழியில் கருணாநிதியின் நண்பர் குடும்பத்தினர் சாலையில் தன்னை வரவேற்க நிற்பதை கண்டு வேனை நிறுத்தி நலம் விசாரித்துவிட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X