Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கவர்ச்சி" பிரபலம் யார்னு தெரியுதா.. பக்கத்துல இருந்த புது மனைவியை காணோமாமே.. அதிர்ந்த மாப்பிள்ளை..!

Subscribe to Oneindia Tamil

கரூர்: ஜஸ்ட் 25 வயதுதான் ஆகிறது பொன்தேவிக்கு.. அதுக்குள்ளேயே ஏகப்பட்ட மோசடிகளை செய்து, ஜெயிலுக்கும் போய்விட்டார்.. யார் இந்த பெண்? என்ன நடந்தது?
கரூர் பசுபதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன்.. 34 வயதாகிறது. இவர் ஒரு பைனாசியர்.. ஆனால், திருமணமாகவில்லை.. இதற்காக பெண் தேடி வந்தார்.

இவர் வரன் பார்ப்பது தெரிந்து, கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவள்ளி ஆகியோர் விக்னேஸ்வரனை அணுகி உள்ளார்.. சிவகாசியை சேர்ந்த பொன்தேவி என்ற பெண் இருப்பதாக சொல்லி உள்ளனர்.. பெற்றோர் யாருமற்ற நிலையில், சித்தி நாகலட்சுமி தயவில் பொன்தேவி வளர்வதாக சொல்லவும், விக்னேஸ்வரனுக்கு பரிதாபம் வந்துவிட்டது.. அத்துடன்

Crime Madurai and 3 persons arrested including a young Insta famous woman involved in multiple marriages case

பொன்தேவி: பொன்தேவியை பிடித்து போயிற்று.. உடனே, ராயனூர் பகுதியில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர்களிடம் பேசி, பொன்தேவியை திருமணமும் செய்து கொண்டார்.. கல்யாணம் முடிந்த 3-வது நாள், சிவகாசியில் உள்ள தன்னுடைய சித்தி வீட்டிற்கு விருந்துக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி விக்னேஸ்வரனை அழைத்துள்ளார் பொன் தேவி.. ஆனால், விருந்துக்கு வெறுங்கையுடன் போக முடியாது, அதனால் போகும்போது, சித்தியின் பிள்ளைகளுக்கு துணி எடுக்க வேண்டும் என்று கூறி, துணி எடுக்க 8,500 ரூபாயை வாங்கி கொண்டு துணிக்கடைக்கு போனார் பொன்தேவி.

Crime Madurai and 3 persons arrested including a young Insta famous woman involved in multiple marriages case

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் பொன்தேவியை காணவில்லை.. இதனால் பதறிப்போன விக்னேஸ்வரன், எங்கெல்லாமோ தேடி அலைந்தார்.. அப்போதும் பொன்தேவி கிடைக்காததால், மனைவியை காணவில்லை என்று சிவகாசி நகர் போலீசில் புகார் தந்தார்... புகாரை வாங்கி பார்த்த போலீசார், பொன்தேவி என்றதுமே அதிர்ந்து போய்விட்டனர்.. உடனே பொன்தேவி குறித்து பல தகவல்களை போலீசார் சொல்லவும், விக்னேஷ்வரன் ஷாக் ஆனார்.

அவினாசிபாளையம்: இந்த பெண், இதற்கு முன்பு பலபேரை திருமணம் செய்தவராம்.. திருச்சி, சேலம், கரூர், அவினாசிபாளையத்தை சேர்ந்த இளைஞர்களை திருமணம் செய்தவர்.. அவர்களிடமும் இப்படித்தான், பணமோ, நகையோ எது கிடைத்தாலும் அபேஸ் செய்துகொண்டு கம்பி நீட்டிவிடுவாராம்.. இப்போது அந்த வரிசையில் விக்னேஸ்வரன் பாதிக்கப்பட்டு விடவும், போலீசார் பொன்தேவியை தேட ஆரம்பித்தனர்.. மதுரை உள்ளிட்ட பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல் தந்தனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, இளைஞர் ஒருவரை இன்னொரு கல்யாணம் செய்துள்ளார் பொன்தேவி என்பது தெரியவந்தது..

Crime Madurai and 3 persons arrested including a young Insta famous woman involved in multiple marriages case

அந்த நபர் மதுரையை சேர்ந்தவர்.. அவருடன் மதுரை முனியாண்டி விலாஸில் சாப்பிட்டுவிட்டு, அவரது கையை பிடித்தபடியே வெளியே நடந்துவந்தபோது, போலீசார் பொன்தேவியை சுற்றிவளைத்து பிடித்தனர். பிறகு கரூர் போலீசுக்கும், விக்னேஸ்வரனுக்கும் மதுரை போலீசார் தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து, பொன்தேவியை கரூர் அழைத்து சென்றனர்.. விக்னேஸ்வரன் தந்த புகாரின்பேரில் பொன்தேவி கைதானார்..

புரோக்கர்கள்: அந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவள்ளி ஆகியோரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். விக்னேஸ்வரன் இந்த கல்யாணத்துக்கு 40 லட்சம் ரூபாய் பொன்தேவியிடம் தந்துள்ளார்.. பொன்தேவிக்கு 8 சவரனில் தாலி செயின் வாங்கி தந்திருக்கிறார்.. அத்துடன், மோதிரம், கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகளையும் ஆசை ஆசையாக வாங்கி தந்துள்ளதும் தெரியவந்துள்ளது.. காலுக்கு மெட்டி, வெள்ளிக்கொலுசு அணிவித்து அழகு பார்த்துள்ளார்..

Crime Madurai and 3 persons arrested including a young Insta famous woman involved in multiple marriages case

அதாவது, கல்யாணம் ஆகி வெறும் 3 நாட்களுக்குள் இவ்வளவு செலவையும் புதுமனைவிக்கு செய்துள்ளார்.. பொன்தேவியின் சொந்த ஊர் தேனி மாவட்டம், கம்பம் என்கிறார்கள்.. அவரது முதல் கணவர் பெயர் கார்த்திக்.. பொன்தேவிக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. பொன்தேவிக்கு இப்போது வயது 25 தான் ஆகிறது.. அதற்குள் ஏகப்பட்ட ஆண்களை மயக்கி திருமணம் செய்துள்ளார்.. பொன்தேவி ஒரு இன்ஸ்டா பிரபலமாம்.. நிறைய வீடியோக்களை வெளியிட்டு, ஏகப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளார்.. இப்போது மொத்தமாக அசிங்கப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

திருமணம் முடிந்ததுமே, விக்னேஸ்வரனும், பொன் தேவியும் ராயனூர் பாலாஜி நகரில் தனி வீடு எடுத்து 2 நாட்கள் குடும்பம் நடத்தினார்களாம்.. 3வது நாள்தான், சித்தி பேச்சை மெல்ல எடுத்தாராம் பொன்தேவி.. அதற்கு பிறகுதான், கரூரில் இருந்து சிவகாசிக்கு புறப்பட்டு சென்றிருக்கறார்கள்.. சித்தி வீட்டிற்கு சென்றதுமே, விக்னேஸ்வரனை வீட்டிலேயே விட்டு, சித்தியை அழைத்துக் கொண்டு, பொன்தேவி டிரஸ் எடுக்க கடைக்கு சென்றிருக்கிறார்.. ஆனால், நீண்ட நேரமாகியும் கடைக்கு போன மனைவி வராமல் இருக்கவும்தான் பதறிப்போயுள்ளார்..

மனைவியை காணவில்லை என்று புகார் தந்த பிறுகுதான், எட்டரை பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துடன் பொன்தேவி மாயமானதும் விக்னேஸ்வரனுக்கு தெரியவந்துள்ளது.. அதற்கு பிறகுதான், சிவகாசி போலீஸ் நிலையத்திலும், கரூருக்கு வந்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திலும் என 2 இடங்களிலும் புகார் தந்தாராம். விக்னேஸ்வரனிடம் இத்தனை லட்சம் ரூபாய், நகைகள் மோசடி என்றால், மற்ற ஆண்களிடம் எவ்வளவு பணம், நகைகளை பறித்திருப்பர் என்ற விசாரணையை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+