அடிக்க பாய்றாங்க.. செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் ரெய்டை நிறுத்திய ஐடி அதிகாரிகள்! அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் ஆதரவாளர்கள் செய்த ஆரவாரத்தால் சோதனையை நிறுத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷனில் இது தொடர்பாக புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

தங்களை சோதனை செய்ய விடாமல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும், அவரது தம்பி அசோக்கின் ஆதரவாளர்கள்ம் தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் குறிப்பாக தங்கள் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் புகார் கூறியுள்ளனர்.

income Tax officials stopped the search and filed a complaint about Minister senthilbalaji supporters at the police station.

பதிலுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீது அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் புகார் கொடுக்க வந்திருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வருமான வரித்துறை அதிகாரிகளும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களும் மாறி மாறி புகார் வாசிப்பதால் கரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வும் காரை காலை எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவமும் வருமான வரித்துறையின் தலைமை அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுவிட்டது.

இதையடுத்து அங்கிருந்து தமிழக டிஜிபி தரப்பை தொடர்பு கொண்டு இது குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையினர் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும், கரூரில் நடந்த எதிர்பாராத நிகழ்வால் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் மீதான ஐடி துறையின் பிடி இன்னும் இருகக்கூடும் எனத் தெரிகிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள வருமான வரித்துறை அசோக்கை தப்பவிடாத படி பிடியை இறுக்கும் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+