தேர்தல் பணிகளில் புகார்... கரூர் கலெக்டர், எஸ்பி இடமாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடி
கரூர்: தேர்தல் பணிகள் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியில் மலர்விழி மற்றும் எஸ்பி மகேஸ்வரனை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் அடுத்த வாரம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
மறுபுறம் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆளும்கட்சிக்குச் சாதகமாக ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது கரூர் ஆட்சியர் மலர்விழியை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல, மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரனையும் தேர்தல் அல்லாத பணிக்குத் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
மலர்விழிக்கு பதிலாகக் கரூர் ஆட்சியராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கரூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஷஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கோவையில் புதிய காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications