முட்டி போட்டு வந்து ‘முதல்வர்’ ஆனாங்க! கோயம்புத்தூர் ‘கிரிப்டோ’மணி! விளாசித் தள்ளிய செந்தில் பாலாஜி!
கரூர் : முட்டி போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர் எனவும், இன்னும் நூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆளப்போவது திமுகதான் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
கரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட திமுக அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்திர்வை துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி," முதல்வராக பதவி ஏற்று முதன் முதலாக கரூர் மாவட்டத்திற்கு வரும் 1ம் தேதி வருகை தரும் முதல்வருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், தாந்தோன்றிமலை அரசு பயணியர் விடுதியில் தங்கும் முதல்வர் 2ம் தேதி திருமாநிலையூர் பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் வரும் வழி எங்கும் 1 லட்சம் பேர் திரண்டு இருந்து வரவேற்பு அளிக்க வேண்டும்

முதல்வர் வருகை
நம் பகுதிகளில் நலத்திட்டங்கள் பெற தகுதி இருந்தும், பெறாமல் இருப்பவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டறிந்து சொன்னால் அவர்களுக்கு முதல்வர் கையால் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும் தலைவர் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியா முழுவதும் கிடைக்க பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நம் முதல்வர் இருக்க வேண்டும்

எஸ்.பி.வேலுமணி
எதிர்முகாமை சார்ந்த ஒரு மணி, திமுக ஆட்சிக்கு மக்கள் மணி அடிப்பார்கள் என்று பேசியுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த கிரிப்டோ மணியாக இருந்தாலும் சரி, எந்த மணியாக இருந்தாலும் சரி. கறந்தபால் ஒருபோதும் மடி புகாது, ஊர்க்குருவி பருந்தாகாது, முட்டி போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர்.

திமுக ஆளும்
இன்னும் நூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆளப்போவது திமுகதான். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த பேராதரவே அதற்கு சாட்சி என்றார். கரூர் மாவட்டத்திற்கு 1 ஆண்டில் 3000 கோடி ரூபாய் திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications