“நெரிசலில் சிக்கி பலி.. விஜய் பதில் சொல்ல வேண்டும்.. அவருக்கு தெரியாதா?” உயிர் தப்பியவர்கள் கேள்வி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். தங்கள் உறவினர்களை பலி கொடுத்தவர்கள் குறுகிய இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதேபோல கூட்டம் சேரும் என தெரிந்தும் ஏன் இந்த குறுகிய இடத்தை விஜய் தேர்வு செய்தார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிர் தப்பியவர்கள், நேரில் பார்த்தவர்கள் நெரிசலுக்கான காரணத்தை அடுக்குகின்றனர். "கூட்ட நெரிசலால்தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. விஜய்யை பார்க்க வேண்டும் என்று மக்கள் முந்தியடித்து வந்தனர். இந்த நேரத்தில் ஒழுங்குமுறை இல்லாததால் நெரிசல் ஏற்பட்டு பலரும் உயிரிழந்திருக்கின்றனர். விஜய் மீது தவறு இருக்கிறது. சிறிய இடம் என்பதால் நெரிசல் அதிகமாக இருந்தது. நாங்கள் இந்த நெரிசலில் உயிர் பிழைத்தது அதிசயம்தான். குழந்தைகள் பலர் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

Vijay stampede Tamilaga Vetri Kazhagam

இந்த மாதிரியான தலைவர்கள், பிரமுகர்கள் வரும்போது மைதானம் போன்ற வெட்டவெளி இடங்களில் காவல்துறையினர் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். விஜய் வெட்டவெளியில் அனுமதி கேட்டிருக்க வேண்டும். அனுமதி கொடுக்கப்பட்ட இடம் மிகவும் நெரிசலான பகுதி. ஒரு வீட்டில் 10 பேர் தான் இருக்க முடியும், 100 பேர் இருக்க முடியாது" என்று கூறியிருக்கின்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "காலை 11 மணியிலிருந்து மக்கள் கூட்டம் ஒரே இடத்தில் குவிந்திருந்தது. உணவு, தண்ணீர் என எதற்காகவும் அவர்களால் அங்கிருந்து நகர முடியவில்லை. விஜய் உள்ளே வரும்போது அவரை பார்க்க கூட்டம் முந்தியடித்து வந்தது. விஜய் பிரச்சாரத்தை முடித்துப்போன பிறகு ஆம்புலன்ஸ் ஒவ்வொன்றாக சென்றன. சாதாரணமாக யாரேனும் மயக்கம் அடைந்து இருப்பார் என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் உயிரிழப்புகள் இந்த அளவுக்கு ஏற்படும் என்று எங்களுக்கு தெரியாது.

இவ்வளவு பேர் இந்த இடத்திற்கு மிக மிக அதிகம். மாநாட்டுக்கு கூடும் அளவுக்கு ஆட்கள் திரளும் என்று தெரிந்தும் இந்த இடத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார். இப்பொழுது எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு யார் பதில் சொல்வார்? விஜய்தான் சொல்ல வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+