"டார்கெட் கோவை:" சொந்த ஊருக்கு நேரமில்லை! செந்தில் பாலாஜி பிஸி! எதிரும் புதிருமாக மாறிய வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

கரூர் : கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி கரூர் திமுகவை கண்டுகொள்ளவில்லை எனவும் இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து திமுகவினரே களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக ஆட்சி காலமாக இருந்தாலும் சரி திமுக ஆட்சி காலமாக இருந்தாலும் சரி முக்கிய பதவிகளை கட்சியிலும் ஆட்சியிலும் வகிப்பவர் கரூர் செந்தில் பாலாஜி.

அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால் எப்போதும் ஹாட் நியூஸ் பட்டியலில் இருக்கும் அவர், கோட்டை விடப்பட்ட கொங்கு மண்டலத்தை மீட்டெடுக்க முதலமைச்சர் ஸ்டாலினால் கோவை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் செந்தில் பாலாஜி

கரூர் செந்தில் பாலாஜி

அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு சென்றாலும், சென்ற இடமெல்லாம் அவருக்கு சிறப்பு தான். அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த அவர், பின்னாளில் தினகரனுக்கு வலது கரமாகவும் செயல்பட்டார். தொடர்ந்து திமுகவில் இணைந்த அவருக்கு அதே வேகத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் அடுத்தடுத்து வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தபோதும் தைரியமாக கரூரில் களமிறங்கி ஆளும் கட்சியின் அமைச்சரையே தோற்கடித்தவர். அதற்காகவே அதிக வருமானம் வரும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டார்.

 கோவை பொறுப்பாளர்

கோவை பொறுப்பாளர்

கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சமாளித்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற கோவை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். வழக்கமான தனது பிரம்மாண்ட அஸ்திரங்கள் மூலம் கோவையை தட்டி தூக்க ரெடியாக இருக்கிறார்செந்தில் பாலாஜி. பிரம்மாண்ட மாநாடுகள் வேட்பாளர் கூட்டங்கள் என அடுத்தடுத்து அவரது நடவடிக்கைகளால் அதிமுகவினர் சற்று கலங்கித்தான் போயுள்ளனர்.

கூட்டணி குழப்பம்

கூட்டணி குழப்பம்

பிரச்சனை அதுவல்ல கோவையில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் செந்தில் பாலாஜி தனது சொந்த மாவட்டமான கரூரில் குறிப்பிடத்தகுந்த அளவு கவனத்தைச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. வேட்பாளர் தேர்வு, கரூர் மாநகராட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு என உள்ளூர் பிரமுகர்களை பணியில் அமர்த்தி வேலை வாங்கிய செந்தில் பாலாஜி, ஒரே ஒரு முறைதான் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான பல திமுகவினர் தங்களுக்கு சீட் கிடைக்காத நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களமிறங்கியுள்ளனர்.

விசிக - திமுக மோதல்

விசிக - திமுக மோதல்

ஆளும் கட்சி என்பதால் எப்படியாவது பதவியை பெற்று விடலாம் என நினைத்து வந்த நிலையில், இந்த செயல்பாடுகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் யார் யார் போட்டியிட வேண்டும் என மாவட்ட திமுக நிர்பந்தம் செய்ததால் பிரச்சினை ஏற்பட்டதாக மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். கரூர் 11 வது வார்டில் கூட்டணிக் கட்சியான விசிகவுடன் நேரடியாக மோதுகிறது திமுக. இதனால் அங்கு திமுக - விசிக கூட்டணி உடைந்துள்ளது. இதனால் விசிகவினர் மற்ற வார்டுகளிலும் திமுகவுக்கு எதிராக வேலை செய்வதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+