12 மணி நேரம் தாண்டிவிட்டது! இன்னும் கரூர் மருத்துவமனையை எட்டிகூட பார்க்காத தவெக தலைகள்! இதான் அரசியலா

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 12 மணி நேரம் தாண்டியும் தவெக நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட பார்க்காதது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் விஜய் பேசத் தொடங்கிய போதே பலரும் மயக்கம் அடைந்த நிலையில், அவர் பிரச்சாரத்தை முடித்து திருச்சியில் இருந்து தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார். விஜயின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

TVK Vijay

சென்னைக்கு சென்ற போது பத்திரிகையாளர்களை கூட சந்திக்காத விஜய், சம்பவம் நடந்து 4 மணி நேரத்திற்கு பின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டார். அதில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன். தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டிருந்தார்.

கண்டுகொள்ளாத தவெகவினர்

கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூத்த தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று பலர் நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து விட்டனர். ஆனால் தவெக நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட பார்க்காதது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

திமுக - அதிமுக உடன் நின்றது

முன்னதாக கரூரில் தவெக கூட்டத்தில் மக்கள் பலியான சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் ஒன்இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மனசு பாரமாக இருக்கிறது. பெத்தவர்கள் செய்த தவறுக்கு.. குழந்தைகள் கூட பலியாகி உள்ளனர். அரசியல் என்னவென்று தெரியாமல்.. இவர்கள் கூட்டிய கூட்டம்.. அரசியல் அறிவற்ற கூட்டம்தான் இதற்கு காரணம்.

மதுரை மாநாடு, திருச்சி மாநாட்டில் இருந்து கத்திக்கொண்டு இருந்தேன். ஏதாவது நடக்கும் என்று எச்சரித்தேன். விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. 20 சதவிகிதம் வாங்குவார்.. 30 சதவிகிதம் வாங்குவார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் கூட்டத்தை முதலில் கட்டுப்படுத்துங்கள் என்று கூறினேன்.

வேலுசாமிபுரத்தில் இருந்து அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு வந்துள்ளேன். இங்கே மக்கள் உதவி வேண்டி நிற்கும் இடத்தில் தவெக தொண்டர்களே இல்லை. முழுக்க முழுக்க திமுக, அதிமுக தொண்டர்கள்தான் இருக்கிறார்கள். மனித சங்கிலி போட்டு உதவி செய்து கொண்டு இருக்கிறார். இங்கே தவெக தொண்டர்களே இல்லை.

களமிறங்கிய திமுக, அதிமுக - ஓடிய தவெக

செல்பி எடுக்க வந்தவர்கள்.. செல்பி எடுத்துவிட்டு போய்விட்டார்கள். ஒரு கூட்டத்திற்கு 2 மணி நேரம் காத்திருக்க சொல்லலாம். 5-6 மணி நேரம் காத்திருக்க சொல்வது என்ன நியாயம். மக்கள் தனக்கு பின்னாடி வருவதை.. தன்னை சார்ந்து இருப்பதை.. பின்னாடி ஏக்கமாக வருவதை இவர் விரும்புகிறார். விஜய் இதை ரசிக்கிறார்.

கூட்டம் கலைந்து விடும்.. எல்லாரும் இருக்க வேண்டும் என்பதற்காக இழுத்துக்கொண்டே செல்கிறார். அவரின் தவறுதான் இது. ஒரு உயிர் போய்விடுமே என்று கூட யோசிக்காமல் இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் வராமல் இருந்தால்.. எப்பா மரத்து மேலே ஏற வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை கூட கேட்காமல் இவர்கள் கூட்டம் கூட்டுகிறார்கள்.

மாவட்டம் மாவட்டமாக சனிக்கிழமை கூட்டம் கூட்டுவேன். தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன். வெயிலில் நிற்க வைப்பேன் என்று செய்வது என்ன அரசியல். மக்கள் இவருக்கு நல்ல பாடம் கொடுப்பார்கள். எடப்பாடி இதே இடத்தில் கூட்டம் கூட்டினார். ஆனால் அங்கே இப்படி எதுவும் நடக்கவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+