'தி.மு.க ஆட்சியில் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் உள்ளனர்'.. ஜோதிமணி எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
கரூர்: மத்திய அரசின் சமூக நீதி துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள்ADPI) என்ற திட்டம் மூலம் நாடு முழுக்க மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவிகள், மூன்று சக்கர வாகனங்கள், ஸ்பெஷல் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ADIP திட்டம் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கரூரில் இத்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஜோதிமணி எம்பி கடும் விரக்தி
இது தொடர்பான முகாம்களை நடத்த கோரி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம், ஜோதிமணி எம்.பி பலமுறை வலியுறுத்தியதாகவும், ஆனால் மாற்றுத்திறனாளி முகாம்களை கலெக்டர் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கரூர் மாவட்ட கலெக்டர் மீது ஜோதிமணி எம்பி கடும் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்
இந்த நிலையில் இந்த பணிகளை செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தனக்கு இடையூறு விளைவிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ள ஜோதிமணி எம்.பி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் கலெக்டர் வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி.யிடம் சமாதானம் பேசி தர்ணாவை முடித்து கொள்ளும்படி கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியவில்லை
ஆனால் ஜோதிமணி எம்.பி மறுத்து விட்டார். இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் ADP தொடர்பான முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இந்த முகாம்கள் நடத்தாத காரணத்தால் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியாத நிலை உள்ளது.

தி.மு.க ஆட்சியிலும் ஊழல் அதிகாரிகள்
இது தொடர்பாக நான் பலமுறை கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கூறி இருக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த முகாமை நடத்த மறுத்து வந்துள்ளனர். அ.தி.மு.க ஆட்சியிலும், தி.மு.க ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இன்னும் உள்ளார்கள் என்று ஜோதிமணி எம்.பி பரபரப்பு குற்றம்சாட்டினார். ஜோதிமணியின் குற்றச்சாட்டை கரூர் கலெக்டர் பிரபுசங்கர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications