கரூரில் அரசியல் பலத்தை காட்ட விஜய் தாமதமாக வந்தார்.. எப்.ஐ.ஆரில் போலீசார் பரபரப்பு தகவல்
கரூர்: அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக விஜய் வேலுசாமிபுரம் வந்தார் என்று போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தவெக தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை என எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆர் வெளியாகி உள்ளது. அதில் விஜய் தன் அரசியல் பலத்தை காட்ட வேண்டும் என்றே 4 மணி நேரம் தாமதமாக வந்தார் என்பது உள்பட பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்.ஐ.ஆரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* "அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதம்.
* மரங்களிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர், மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர் - அசாதாரண சூழல்
* ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் கேட்கவில்லை, நீண்ட நேரம் காத்திருப்பு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லை
* கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலை சோர்வு. கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்" என்று எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
எப்.ஐ.ஆர் அறிக்கை
போலீஸ் எப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பதாவது:- கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 கரூர் அவர்களுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. கரூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளராகிய நான் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ புறக்காவல் நிலைய ருந்து 21.00 மணிக்கு கிடைக்கப்பட்ட மருத்துவமனை தகவலீ, அடிப்படையில் வழதிவு செய்த விபரம் பின்வருமாறு.
தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்ட அவர்கள் அவரது கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் செயலாளர் திரு.மதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் (456/Pet/1/5DOP/KRR/2025 Dt. 26.09.25) அடிப்படையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 ம் தேதி கரூர் நகர உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்களின் ந.க.எண்.278/கா.து.கா/கா.உ./கரூர்/2025 நாள்.26.09.25 செயல்முறை ஆணையின்படி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு இன்று 27.09.2025 ம் தேதி கனம் காவல் துறைத்தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் ஊர்க்காவல்படையை சேர்ந்த சுமார் 500 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்
தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் திணறல் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகளிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்.
நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் மடுபட்டதால், போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும், தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர கையாளவில்லை. ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே விழுந்தனர்.
வேண்டும் என்றே லேட் ஆக வந்த விஜய்
கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியும் அந்த நீண்ட தாமரத்தின் காரணமாக இவை நேர்ந்தன.. என்று கூறபப்ட்டுள்ளது.












Click it and Unblock the Notifications