ஆடு மேய்க்க போன இடத்தில் கண்ட காட்சி.. கரூரில் மாமியார் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற மருமகள்
கரூர்: கரூர் மாவட்டம் வெட்டுக்காட்டு வலசி கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்பருக்கும், அவரது மாமியார் பாப்பாத்தி என்பவருக்கும் இடையே தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த விஜயலட்சுமி மகன், மகளை பார்ப்பதற்காக வந்த போது, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் தலையில் கல்லை போட்டு மாமியாரை கொலை செய்த மருமகள் விஜயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் வெட்டுக்காட்டு வலசி கிராமத்தை சேர்ந்த 52 வயதாகு லோகநாதன் (வயது 52). இவரது மனைவி விஜயலட்சுமி (45). இந்த தம்பதிக்கு திருமாணமாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.. இவர்களுக்கு ரஞ்சித் குமார் (20) என்ற மகனும், பவதாரணி (18) என்ற மகளும் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் லோகநாதனுக்கும், விஜயலட்சுமிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். லோகநாதன் தனது தாய் பாப்பாத்தி (72) மற்றும் மகன், மகளுடன் வெட்டுக்காட்டு வலசில் குடியிருந்து வருகிறார். கணவனை பிரிந்த விஜயலட்சுமி திருப்பூர் மாவட்டம், நாகமநாயக்கபட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். எனினும் விஜயலட்சுமி அவ்வப்போது தனது மகன், மகளை பார்ப்பதற்காக வெட்டுக்காட்டு வலசிக்கு வந்து செல்வது வழக்கமாம்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 18-ந் தேதி விஜயலட்சுமி தனது மகன், மகளை பார்ப்பதற்காக வெட்டுக்காட்டுவலசிக்கு வந்து தங்கி இருந்தார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி காலை பாப்பாத்தியும், விஜயலட்சுமியும் வீட்டில் இருந்து ஆடுகளை மேய்க்க அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று உள்ளார்கள். பின்னர் இரவு விஜயலட்சுமி மட்டும் வீட்டிற்கு வந்துள்ளார். பாப்பாத்தி வரவில்லை.
இதையடுத்து லோகநாதன் தனது அம்மா பாப்பாத்தியை அக்கம் பக்கத்தில் இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பாப்பாத்தி ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார். இதைக்கண்ட லோகநாதன் தென்னிலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சந்தேகத்தின்பேரில், விஜயலட்சுமியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நானும், எனது மாமியார் பாப்பாத்தியும் ஆடு மேய்க்க சென்றோம். அப்போது நான் எனது கணவரை பிரிந்து சென்றது தொடர்பாக எனக்கும், மாமியாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் கீழே கிடந்த பாறாங்கல்லை பாப்பாத்தியின் தலையில் போட்டு கொலை செய்து விட்டேன். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாமியார் தலையில் மருமகள் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கரூர்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications